ஃபிட்னஸ் பார்மை நிரூபிக்க தமிழக அணியைச் சுருட்டிய ரவீந்திர ஜடேஜா!

0
8944
Jadeja

கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்கான எதிர்கால கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்கான மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் தொடர் இதுவாகும்!

நடப்பு ரஞ்சித் தொடரில் மூன்று நாட்களுக்கு முன்னால் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்ட்ரா அணிகள் சென்னை மைதானத்தில் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்த போட்டியில் சௌராஷ்டிரா அணியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு ஃபிட்னஸ் மற்றும் பார்மை நிரூபிக்கும் பொருட்டு இந்திய அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருந்தார்.

முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 24 ஓவர்கள் பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஒரே ஒரு விக்கட்டை மட்டுமே கைப்பற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

இதற்கு அடுத்து விளையாடிய சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 192 ரண்களில் சுரண்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜாவின் அபார சுழற்பந்து வீச்சில் அடங்கியது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் 17.1 ஓவர்கள் பந்த வீசிய ரவீந்திர ஜடேஜா 53 ரன்களை மூன்று மெய்டன்கள் செய்து தந்து ஏழு விக்கட்டுகளை கைப்பற்றி தன் பிட்னஸ் மற்றும் பௌலிங் ஃபார்மை நிரூபித்திருக்கிறார். தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்த செயல்பாடு இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணி உடன் விளையாட இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்பதற்கான மிக முக்கிய தொடராகும். இந்தத் தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!