சி.எஸ்.கே அணியிலிருந்து ஜடேஜா விலகுவது உறுதி ஆகிறது?! – ட்வீட்டர் லிங்க் உள்ளே

0
527
Csk jadeja

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் உலகின் நம்பர் 1 டி20 லீக் என்றால், இதில் நம்பர் 1 அணியாக மும்பை இன்டியன்ஸ் அணியோடு இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்படியான சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாள வீரர்கள் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, டிவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா!

சென்னை அணிக்கு பவுலிங், பேட்டிங் மட்டுமல்லாது பீல்டிங்கிலும் களத்தில் மிகப்பெரிய பங்களிப்பைத் தரக்கூடிய இவர், சென்னை அணியின் தற்போதைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான வீரராக இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு சென்னை அணியின் வெற்றிக்கரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கிக்கொள்ள ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கொண்டு வந்தது சென்னை அணி நிர்வாகம்!

எதிர்பாராதவிதமான பல காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்குச் சரியாக அமைக்கவில்லை. முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜடேஜாவிற்கு நெருக்கடியாய் போட்டிகள் அமைந்தது. இந்த நிலையில் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி பெறப்பட்டு மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது!

இது ஜடேஜாவை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், இதனால்தான் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சென்னை அணி நிர்வாகம் தரப்பில் தங்களுக்குள்ளான உறவு சுமூகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜடேஜா சென்னை சமூக வலைத்தள பக்கத்தில் சென்னை அணியை பின்தொடர்வதை நிறுத்தினார். மேலும் “எல்லாவற்றையும் விட சுயமரியாதை முக்கியம்” என்று பதிவிட்டு இருந்தார்!

- Advertisement -

தற்போது சென்னை அணியின் சமூக வலைத்தள பக்கத்தில் ஜடேஜா அணிக்குள் வந்து பத்து ஆண்டுகள் ஆனதிற்காக, இந்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி ஒரு பதிவு இடப்பட்டு இருந்தது. அதில் ஜடேஜா “பத்து ஆண்டுகளைத் தாண்டியும் போவோம்” என்று கமெண்ட் செய்திருந்தார். தற்போது அந்த கமெண்ட்டை ஜடேஜா டிலைட் செய்திருக்கிறார். இதை ட்வீட்டரில் ஒருவர் கண்டறிந்து ட்வீட் செய்திருக்கிறார். அதன் ட்வீட் லிங்க் கீழே உள்ளது!