மனைவிக்கு வாக்கு கேட்பதற்காக இந்திய அணிக்கு நோ சொன்ன ஜடேஜா.. என்ன நடந்தது

0
192

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடத்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் நடுவில் காயம் ஏற்பட்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா, டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறாமல் போனார்.இதனால் இந்திய அணியின் பேட்டிங் வெகுவாக பாதித்தது.

ஜடேஜாவுக்கு பதில் இடம்பெற்ற அக்சர்பட்டேல் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் உலககோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஜடேஜா உடல்தகுதியை எட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஜிம்மில் தனது பயிற்சியை அவர் தொடங்கிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.இதனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியமானது.

இதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து தொடரில் கூட அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஜடேஜாவின் மனைவி ரீவாபா ஜடேஜா பாஜக சார்பாக ஜாம்நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தனது மனைவிக்காக வாக்கு சேகரிப்பில் ஜடேஜா ஈடுபட்டுள்ளார். இதனால் தமக்கு காயம் இன்னும் சரியாகவில்லை என்று பிசிசிஐயிடம் ஜடேஜா கூறி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா களமிறங்குவது சந்தேகமாக உள்ளது.

ஜடேஜாவுக்கு பதிலாக மாற்றுவீரரை பிசிசிஐ இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜடேஜா ஜனவரி மாதம் தான் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் நான்காம் தேதி தொடங்குகிறது. ஜடேஜாவின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் அரசியலுக்காக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காமல் இருப்பது நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.