ஜட்டு இல்லைனா என்னா லட்டு மாதிரி இன்னொருத்தர் கிடைச்சிட்டாரே! – யுசுவேந்திர சஹல் பேட்டி!

0
2561

ஜடேஜா இல்லை என்றால் என்ன அதற்கு பதிலாக புதிய வீரர் கிடைத்து விட்டாரே என சமீபத்திய பேட்டி சஹல் பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு நம்பர் ஒன் பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பு காயத்தால் அவதிப்பட்டு வந்தார் பிறகு சரியாக ஐபிஎல் தொடரின் போது குணமடைந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு ஓரிரு தொடர்களில் விளையாடிய ஜடேஜா, ஆசிய கோப்பை தொடரின் நடுவிலேயே பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் தொடரை விட்டு விலகினார். அவரால் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு குணமடைய முடியாது என திட்டவட்டமாக மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மாற்று வீரர் ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். டி20 உலக கோப்பையில் ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர் இல்லை என்பது இந்தியாவிற்கு சற்று பின்னடவாகவே அமைந்திருக்கிறது. ஆனாலும் அவரை போன்று இடது கை சுழல் பந்துவீச்சு மற்றும் இடதுகை பேட்டிங் வைத்திருக்கும் அக்சர் பட்டேல் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டு உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்.

தனது தேர்வை நியாயப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் எட்டு விக்கெட் கைப்பற்றி சொற்ப ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் நன்றாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அணியின் மற்றொரு சுழல் பந்துவீச்சாளரான யுசுவேந்திர சஹல் அக்சர் பட்டேல் பற்றியும், ஜடேஜா இடம் பெறாததால் அக்ஸர் பட்டேலுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“ஜடேஜாவை யாரும் ஈடு செய்ய முடியாது. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ஆனாலும் இந்திய அணி பின்னடைவை சந்திக்காமல் அவருக்கு நிகரான ஆல்ரவுண்டரை தேடிப்பிடித்து இருக்கிறது. அக்சர் பட்டேல் மிகுந்த நம்பிக்கையாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஜடேஜாவை ஈடு செய்யும் அளவிற்கு செயல்படுகிறார். கடந்த சில தொடர்களில் அக்சர் செயல்படும் விதம் ஜடேஜாவிற்கு நிகரான வீரர் இவர் தான் என நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.” என்றார்.