டிவிட்டரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கேட்ட கேள்விக்கு நக்கலாக பதிலளித்துள்ள சி.எஸ்.கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா

0
143
Jadeja Reply to Starsports Tamil

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் தற்போதே அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. 10 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இனி அடுத்த மாதம் 12 மற்றும் 13ஆம் தேதி மெகா ஏலம் நடைபெறுவது ஒன்றே பாக்கி

மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை கைப்பற்றப் போகிறது என்று அந்த அணியின் ரசிகர்கள் தற்போது முதலே விவாதித்துக் கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இவ்வாறு ஒவ்வொரு நாளும் விவாதித்து வருவது வழக்கம் ஆகியுள்ளது.

- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பக்கம் ட்விட்டர் வலைதளத்தில் இட்ட பதிவு

ரசிகர்கள் விவாதம் செய்து வரும் வரிசையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ட்விட்டர் வலைத்தளம் இன்று சென்னை அணி ரசிகர்களுக்காக ஒரு பதிவுவிட்டது. அந்த பதிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் xi பட்டியல் போல வடிவமைத்து அந்த அணி நிர்வாகம் கைப்பற்றியுள்ள மகேந்திர சிங் தோனி ரவிந்திர ஜடேஜா ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோரை வரிசைப்படுத்தி, மீதம் உள்ள இடத்தில் எந்தெந்த வீரர்களை அந்த அணி வாங்கினால் நன்றாக இருக்கும் என்று ஒரு கேள்வி எழுப்பியது.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஓபனிங் வீரராக ருத்ராஜ், ஒன் டவுன் இடத்தில் 3வது வீரராக மொயின் அலி, 7ஆவது இடத்தில் எம்எஸ் தோனி மற்றும் 8ஆவது இடத்தில் ரவிந்திர ஜடேஜாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பக்கம் வரிசைப்படுத்தி இருந்தது.

ரவிந்திர ஜடேஜாவின் நக்கலான பதில்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பக்கம் அந்த பதிவை முற்றிலுமாக தமிழில் பதிவேற்றம் செய்ததால் அதை புரிந்து கொள்ள முடியாத ரவிந்திர ஜடேஜா அந்த பதிவின் கீழ் “யாராவது இதை மொழிபெயர்த்து கூற முடியுமா” என்று கேட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு என்ன என்பதைப் புரிந்து கொண்டு “8வது இடம் எனக்கு வெகு சீக்கிரமாக உள்ளது போல் தோன்றுகிறது, என்னை 11ஆவது இடத்தில் வையுங்கள். அதுதான் மிக சரியாக இருக்கும்”, என்று நக்கலாக பதில் அளித்து இருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் போட்டியை தொடர்ந்து பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் ரவீந்திர ஜடேஜா 5 மற்றும் 6ஆவது இடத்தில் தான் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறிப்பாக 6வது இடத்தில் அவர் இதுவரை அதிகபட்சமாக 58 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 993 ரன்கள் குவித்துள்ளார். அந்த இடத்தில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 30.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.96 என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை இரண்டு இடங்கள் கீழே தள்ளி பட்டியலட்ட்டதை உணர்ந்து கொண்ட ரவிந்திர ஜடேஜா சற்று நக்கல் தொனியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பக்கத்தை கிண்டலடித்து பதிலளித்த விதம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.