நேர்காணலில் கூறிய தன் வாழ்நாள் கனவை இலங்கை அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸ்சில் நிறைவேற்றிய ஜடேஜா

0
561
Ravindra Jadeja

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய முன் தினம் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி நேற்று முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரண்டாம் நாளில் தங்களுடைய முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது. இன்று மூன்றாம் நாள் விளையாட தொடங்கிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த காரணத்தால் மீண்டும் ஃபாலோ ஆன் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது.

- Advertisement -

தனது கனவை நிறைவேற்றி கொண்ட ரவீந்திர ஜடேஜா

ஒருமுறை ரவீந்திர ஜடேஜாவிடம் உங்களது கிரிக்கெட் கேரியரில் நீங்கள் செய்து முடிக்க ஆசைப்படும் தனிப்பட்ட ஒரு மைல்கல் என்றால் அது என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஒரு போட்டியில் பேட்டிங்கில் சதம் அடுத்து அதே போட்டியில் பந்து வீச்சில் ஃபைஃபர் ( 5 விக்கெட்களை கைப்பற்றுவது ) எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அன்று ஒருநாள் அவர் கூறியதை இன்று அவர் நிறைவேற்றி காட்டியுள்ளார். ஆனால் ஒரே இன்னிங்ஸ்சில் அவர் இன்று அதை நிறைவேற்றியுள்ளது தனிச்சிறப்பு. இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் முடிவில் 175* ரன்கள் குவித்து பந்து வீச்சில் சரியாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், இந்த குறிப்பட்ட சாதனையை (ஒரு இன்னிங்ஸ்சில் 100 ரன்கள் அடித்து 5 விக்கெட் டுகளை கைப்பற்றுவது) செய்த மூன்றாவது இந்திய வீரராக ஜடேஜா இன்று சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்திய வீரர்கள் மத்தியில் ஒரு இன்னிங்ஸ்சில் 100 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் :

மங்காட் – 184 மற்றும் 5/196 (இங்கிலாந்துக்கு எதிராக)

- Advertisement -

உம்ரிகர் – 172 * மற்றும் 5/107 (வெஸ்ட் விண்டீஸ் எதிராக)

ஜடேஜா – 175 * மற்றும் 5/41 (இலங்கைக்கு எதிராக)