நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் ஐட்டம்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் நான்காவது போட்டியில் பஞ்சாப் அணி பரபரப்பாக விளையாடி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த முக்கிய இரண்டு வீரர்கள் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மான்கில் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கடந்த சீசனில் ஜொலித்த தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் மட்டுமே ஓரளவு நன்றாக விளையாடினார்.
மற்ற வீரர்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய கூப்பர் கான்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விளையாடிய அவர் எந்தவித அழுத்தமும் எதிர்கொள்ளாமல் 44 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஐந்து சிக்சர் என 72 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இவர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த போட்டி குறித்து அஸ்வின் கூறும் போது ” ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பஞ்சாப் அணியில் அஸ்மதுல்லா ஓமர்சாய் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்போது பார்லெட் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இறுதியில் அவர் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும் போது வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை ஆஸ்திரேலியர்களை கொண்டு நிரப்பியதன் மூலம் தான் செய்வது சரி என்று மீண்டும் ஒருமுறை ரிக்கி பாண்டிங் நிரூபித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கூப்பர் கான்லியின் முதல் ஆட்டம் இது. இதற்கு முன்னர் அவர் ஐபிஎல் தொடரிலோ இந்தியாவிலோ விளையாடியதில்லை அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இது பவுன்ஸ் ஆடுகளம் கிடையாது வழுக்கும் தன்மை கொண்ட ஆடுகளம் அதனால் இதற்கு ஏற்ப தன்னை அவர் மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தில் பெரிய அழுத்தம் இருந்தது ஆனாலும் அவர் அதனை சிறப்பாக கையாண்டு விளையாடி வெற்றிகரமாக முடித்து வைத்திருக்கிறார். அவருக்கு 22 வயது தான் ஆகிறது அவர் பிபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே இந்தியாவில் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு அவர் விரைவாக வருவார்” என்று பேசி இருக்கிறார்.