நாளை துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அனுப்பி எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழகத்தின் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் கிடைத்த வாய்ப்பை தமிழகத்தில் சாய் சுதர்சன் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு சிறப்பான பேட்டிங் தமிழ் இருக்கும் படிக்கலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சாய் சுதர்சன் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன். அவர் மிகவும் உந்துதல் பெற்ற, உயர்தரமான வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நிச்சயம் ரன்கள் எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”
“அவர் ரன்கள் எடுப்பார் என்பதால் தற்போது இந்திய அணியில் வாய்ப்புக்கு போட்டி இருக்கும் நிலையில் அவருக்கு உதவியாக இருக்கும். எனவே அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே இன்னும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்றும் அவர் நன்றாக விளையாடுவார் என்று நம்புகிறேன்”
“தற்போது வெற்றி பெற்ற அணியை மாற்றக்கூடாது. அப்படியே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். சாய் சுதர்சன் பற்றி நிறைய பேச்சுக்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் நிச்சயம் மீண்டு வந்து விடுவார்”
இதையும் படிங்க : பும்ரா இல்ல.. சிராஜ்க்கு தான் ஓய்வு.. ஜடேஜா நம்பர் 1.. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்
“சாய் சுதர்சன் மிகவும் உறுதியான மனநிலை கொண்ட ஒரு பையன். ஆனால் அவர் உள்ளே செல்லும் பொழுது எப்படி இருக்கிறார், என்ன மாதிரியான மனநிலை அவருக்கு உருவாகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சாய் சுதர்சன் உங்களுக்கு உங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது” என்று கூறியிருக்கிறார்.