இந்திய கிரிக்கெட்

ஆர்சிபிய அடுத்த ஐபிஎல் கண்ட்ரோல் பண்ண முடியாது.. அப்படி ஒரு பிளேயரை வாங்கிட்டாங்க – அஸ்வின் வியப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி வாங்கிய ஒரு வீரர் தற்போது மிகப்பெரிய பவுலிங் ஃபார்மில் இருப்பதை ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் வருவதற்கு முன்பாகவே ஆர்சிபி அணியிடம் விளையாடுவதற்கு பலமான பிளேயிங் லெவன் கையில் இருந்தது. பதினாறு கோடியுடன் வந்த அவர்கள் மிகச் சிறப்பான பேக்கப் வீரர்களை வாங்கி தற்போது அசுர பலத்துடன் இருக்கிறார்கள்.

பதினாறு கோடி லாபம்

கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது வெங்கடேஷ் ஐயர் 23 கோடி வரை சென்று ஆர்சிபி ஏலத்தில் கேட்டது. இந்த ஏலத்தில் அவரை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி பதினாறு கோடி ரூபாயை மீதி செய்திருக்கிறது.

மேலும் ஹேசில் வுட்டுக்கு பேக்கப்பாக ஜேக்கப் டஃபி மற்றும் யார் தயாலுக்கு பேக்கப்பாக மங்கேஷ் என்ற இடதுகை இந்திய ஸ்விங் பவுலர் ஆகியோரை வாங்கி சிறப்பான பெஞ்ச் வலிமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முறையும் ஆர்சிபி கோப்பையை வென்றால் ஆச்சரியப்பட முடியாத அளவுக்கு வலிமையாக இருக்கிறது.

- Advertisement -

ஆர்சிபி திருடிவிட்டது

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” நியூசிலாந்தின் பேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி என்ன மாதிரி ஒரு வீரராக மாறி கொண்டு வருகிறார் என்று பாருங்கள். இந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக மாறியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மட்டும் 23 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்று இருக்கிறார்”

இதையும் படிங்க : ஏம்பா அகர்கரு நீதானா இது.. என்னால நம்பவே முடியல.. கில் இல்ல ரொம்ப சந்தோசம் – ஸ்ரீகாந்த் பேட்டி

“மேலும் டி20 கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் அவர் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் டி20 போட்டிகளில் 18 பவுலிங் ஆவரேஜ், ஒரு ஓவருக்கு 7.89 ரன்கள், 53 சதவீதம் டாட் பந்துகள், இத்துடன் 57 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை ஆர்சிபி அசால்ட்டாக அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது சிறப்பான திருட்டு போல இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by