கிரிக்கெட்

ரவி அஸ்வின் உதவியால் ட்விட்டர் வலைதளத்தில் பயனடைந்த அஜாஸ் பட்டேல் – டுவீட் இணைப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்திய மண்ணில் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தமாக 14 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஸ்பின் பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் பிரமாண்ட சாதனை படைத்தார்.

ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜிம் லேக்கர் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அனில் கும்ப்ளே மட்டுமே இருந்தனர். அவர்கள் வரிசையில் தற்போது மூன்றாவது பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தப் பெயர் பட்டியலில் அஜாஸ் பட்டேல் இணைந்துள்ளார்.

நமது இந்திய அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியில் அனைத்து வீரர்களின் கையொப்பத்தினை வாங்கி, அந்த டெஸ்ட் ஜெர்சியை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ட்விட்டர் வலைதளத்தில் அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டி பிரமாண்ட சாதனை படைத்த அவருக்கு வெரிஃபைட் டிக் ( verified account ) வழங்க வேண்டும் என்று டுவிட்டரிடமே வேண்டுகோள் விடுத்தார்.

- Advertisement -

அவரது வேண்டுகோளை ஏற்று டுவிட்டர் வலைதளமும் அஜாஸ் பட்டேல் கணக்கிற்கு வெரிஃபைட் டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ரவிச்சந்திரன் அஷ்வின் போட்ட அந்த டுவிட் மூலமாக அஜாஸ் பட்டேல் டுவிட்டர் கணக்கிற்கு பின்பற்றுபவர்களின் ( Followers ) எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by