இந்திய கிரிக்கெட்

கம்பீர் ஏன் இந்த தப்பை தொடர்ந்து செஞ்சுட்டே வராரு.. பும்ராவின் இந்த பிரச்சனை எனக்கு புரியல – ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஹாஸில் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதற்குப் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பும்ராவிற்கு அடுத்ததாக சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படுபவர் அர்ஸ்தீப் சிங். ஆனால் அவர் கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தொடர்ச்சியாக விளையாடாமல், அவ்வப்போது மட்டுமே விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியிலும் அவர் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து தனது கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “நீங்கள் ஓய்வு கொடுக்க விரும்பினால் பும்ராவிற்கு முதலில் ஓய்வு கொடுங்கள். ஏனென்றால் அவருக்கு தான் பணிச்சுமை மேலாண்மை சிக்கல் உள்ளன. மாறாக அர்ஸ்தீப் சிங் தான் அடுத்த இடத்தில் முன்னணி அதிக விக்கெட் வீழ்த்துபவர். நாங்கள் டி20 உலகக்கோப்பை விளையாடும் போது சிறிது பனி இருக்கும். அந்த சமயத்திலும் அவர் சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் இங்கு அர்ஸ்தீப் சிங் விவாதம் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதையும் படிங்க:ஹேசில்வுட் இனி மீதி டி20 மேட்ச் ஆட மாட்டாரா?.. எனக்கு அதெல்லாம் தெரியாது – அபிஷேக் ஷர்மா கொடுத்த ரியாக்சன்

அவர் தனது இடத்திற்கு தகுதியானவர். பும்ரா இல்லாமல் இருக்கும்போது இவர் தான் அடுத்த நிரந்தர பந்துவீச்சாளராக இருக்க வேண்டும். பும்ரா விளையாடவில்லை என்றால் இவர் தான் உங்களது முதன்மையான பந்துவீச்சாளர். இந்த பிளேயிங் லெவனில் அர்ஸ்தீப் சிங் எப்படி விளையாட தவற விடுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நிச்சயமாக உண்மையில் அது எனக்கு புரியவில்லை” என்று அஸ்வின் தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts