டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் இவர் – இந்திய வீரரை குத்திக்காட்டிய முன்னாள் வீரர்!

0
25081

டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருப்பதற்கு இவர் தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறியதால் தோல்விக்கான காரணங்கள் என சில இந்திய வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

முதல் காரணமாக பேட்டிங்கில் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுக்காத ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவர் மீதும், அதற்கு அடுத்ததாக மூத்த பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒருபடி மேலே சென்று, இந்த உலகக் கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் இடம் பெறுவதற்கு தகுதியற்றவர் என்று அஸ்வின் மீது கடுமையாக சாடி இருக்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டானிஸ் கனேரியா.

ஆறு போட்டிகளில் ஆறு விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி, எக்கனாமி 8.15 வைத்திருக்கிறார். முக்கியமான அரை இறுதி போட்டியில் இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த புள்ளி விவரங்களை குறிப்பிட்டு சாடிய டேனிஸ் கனேரியா,

- Advertisement -

“ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர். ஆஸ்திரேலிய மைதானங்களில் இவரது பந்துவீச்சில் எளிதாக ரன்கள் அடித்து விடுவார்கள் என்பதால், திணறுவார் என்று எப்படி தெரியாமல் போனது?.

விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வினை முழுக்க முழுக்க டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தினார். டி20 போட்டிகள் அஸ்வின் விளையாடுவதற்கு சாதகமாக இல்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய போன்ற மைதானங்கள் சாதகமாக இல்லை. அதிலும் ஆப்-ஸ்பின் போட முடியாது. ஆனால் அஸ்வின் ஆப்-ஸ்பின்னர் என்பதால் அவரை அணியில் வைத்திருப்பதும் சரி வராது.” என்றார்.

மேலும் ரிஷப் பன்ட் பற்றி பேட்டி அளித்தபோது, “பண்ட்டை இந்திய அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். தினேஷ் கார்த்திக்கை வெளியில் அமர்த்திவிட்டு அவரை உள்ளே எடுத்து வந்தது எந்த விதத்தில் பயன்பட்டது என்றும் தெரியவில்லை.

ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னர் களமிறக்கி விட்டு ஸ்பின்னர்களை விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு திட்டத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை என்று தெரிகிறது.” என விமர்சித்தார்.