ஆஸிக்கு புடிக்காத இந்த விஷயத்தை ரோஹித் செய்யணும்.. அடுத்த போட்டிக்கு திட்டம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து

0
72

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியின் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் களம் இறங்க உள்ளார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணி இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனத்தை சந்தித்து. ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தது. அது மட்டுமல்லாமல் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அப்போது செயல்பட்ட கேப்டன் பும்ரா சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் இறங்கி பேட்டன் செய்ய வேண்டும் என்று கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணி ரோகித் சர்மாவை எந்த இடத்தில் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்பாதோ அந்த இடத்தில் ரோகித் சர்மா களமிறங்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது எந்த இடத்தில் அவர் மிகவும் ஆபத்தானவர் என்று ஆராயும் அளவுக்கு அவர் அனுபவம் கொண்ட வீரர். ஆஸ்திரேலியா அணி எந்த இடத்தில் ரோகித் சர்மாவை பேட்டிங் செய்ய பார்க்க விரும்பாதோ அந்த இடத்தை ரோகித் சர்மா தேர்வு செய்ய வேண்டும். அவர் ஒரு முழுமையான தலைவர் என்பதால் அதை இவரால் செய்ய முடியும். அவர் தரத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாத திறமையான வீரர்.

இதையும் படிங்க:ஆஸி டெஸ்ட்ல.. கங்குலிக்கு இத செஞ்சது என்னோட தப்புதான்.. அப்பதான் இந்த முடிவு பண்ணேன் – டிராவிட் பேட்டி

அவர் ஒரு வலுவான வீரராக இருப்பதால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும். இந்த அமைப்பில் அனுபவம் மற்றும் இளமை என்பது சரியான அமைப்பாகும். எனவே எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ரோஹித் ஆஸ்திரேலியா வந்ததிலிருந்து அவருக்கு போதிய நேரம் இல்லாததால் கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிக விரைவாக பயிற்சி போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலை அவருக்கு இருந்தது. எனவே அந்தப் போட்டியில் களமிறங்கியது போலவே அடுத்த போட்டியிலும் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -