“2023 உலகக்கோப்பை முடியட்டும்.. இவரு கண்டிப்பா இந்திய டீமை விட்டு போய்டுவாரு” எல்லோருக்கும் ஷாக் கொடுத்த ரவி சாஸ்திரி

0
688

2023ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா நிச்சயம் ஓய்வு பெறுவார் என்று ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்கள் தங்களது அணிக்கு மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னணி வீரராக பங்காற்றி வருகின்றனர். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸ் அப்படிப்பட்ட வீரராக தான் இருந்தார். அவர் திடீரென ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். வேலைப்பளு காரணமாக இத்தகைய முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஓய்வில்லாமல் விளையடியதால் காயம் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் கிரிக்கெட் வாழ்க்கையே முடித்துவிட நேரிடும் என்பதற்காக, குறிப்பிட்ட போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுவிட்டு டி20 மற்றும் டெஸ்ட் ஏதேனும் ஒன்றில் தொடர்ந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்திய அணியிலும் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்தார். தொடர் வேலைப்பளு காரணமாக, முதுகுபகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போனது. கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றினார். ஆகையால் மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். தொடர்ந்து டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார் என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“வீரர்கள் வேலைப்பளு மற்றும் உடல்நிலை காரணமாக மூன்றுவித போட்டிகளிலும் விளையாடாமல் குறிப்பிட்ட போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடு வருகின்றனர். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தொடர்ந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதை தவறவிடாமல் நன்றாக செயல்பட நினைப்பார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்காக மட்டுமே ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் இவர், அதன்பிறகு டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார்.

உள்ளூர் டி20 தொடர்கள் வரும் காலங்களில் மேலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும். இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வரவேற்பு குறைந்துவிடும். தற்போதே இரு அணிகளுக்கும் இடையேயான தொடர்கள் குறைந்து வருகிறது. இதற்காக வீரர்களை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என கிரிக்கெட் நிர்வாகம் கட்டளையிட முடியாது. வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்வை காயமின்றி தொடர்ந்து எடுத்துச் செல்ல எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

சிலர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலர் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். வெகு சில வீரர்கள் மட்டுமே மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். அவர்களும் நீண்டதூர கிரிக்கெட் வாழ்வுக்கு இது கை கொடுக்காது என்பதால் நிச்சயம் சில காலத்திற்குப் பிறகு குறிப்பிட்டு சில கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவர்.” என்பதை தனது சமீபத்திய பேட்டியில் ரவி சாஸ்திரி ஆணித்தனமாக பதிவிட்டார்.