2014ம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதற்கு இது தான் காரணம் – மனம் திறந்த ரவி சாஸ்திரி

0
412
MS Dhoni and Ravi Shastri

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் தோனி என்றால் அது மிகை ஆகாது. இந்திய அணி வரலாற்றிலேயே இதுவரை தோணி போன்ற சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மன் இதுவரை இந்திய அணிக்கு கிடைத்தது இல்லை. பல ஆண்டு காலமாக ஐசிசி போட்டிகளில் நாக்-அவுட் சுற்று வரை மட்டுமே சென்று வந்த இந்திய அணியை முதன் முறையாக மூன்று முக்கிய தொடர்களில் கோப்பை வெல்ல வைத்த கேப்டன் தோனி. டி20 உலகக் கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி என்று தோனி இல்லாத கோப்பைகளே இல்லை என்று கூறிவிடலாம். இவையுடன் சேர்த்து சில ஐபிஎல் கோப்பைகளையும், சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளார் தோனி.

டெஸ்ட் போட்டிகளிலும் கோலி வருவதற்கு முன்பு சிறந்த இந்திய கேப்டன் தோனியாகத் தான் இருந்தது. ஆனால் 2014 அதிரையில் தொடர் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று தோனி ஓய்வு அறிவித்து விட்டார். சிறந்த உடற்தகுதி இருந்தும் தோனி திடீரென ஓய்வை அறிவித்தது பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அந்த முடிவு பற்றி பல ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய இந்திய அணியின் டைரக்டராக இருந்த ரவி சாஸ்திரி தற்போது பேசியுள்ளார்.

Satgazing – Players in my life என்ற தனது புத்தகத்தில் இது குறித்து பேசியுள்ளார் ரவி சாஸ்திரி. “அப்போதைய காலகட்டத்தில் தோனி தான் சிறந்த கேப்டனாக இருந்தார் பல முக்கிய கோப்பைகளை வென்று பலரும் வியக்கத்தக்க கேப்டனாக இருந்தவர் தோனி ஆனால் அவர் திடீரென்று இப்படி முடிவெடுத்தது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது” என்று கூறியுள்ளார். 100 டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு இன்னமும் 10 போட்டிகளில் ஆட வேண்டும் என்ற நிலையில் தோனி இந்த முடிவை எடுத்தது தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

தோனியின் இந்த முடிவை மாற்றும் தானே சென்று தோனியிடம் சொன்னதாகவும் ரவி கூறியுள்ளார் ஆனால் தோனி மிகவும் மன உறுதியுடன் இந்த முடிவு எடுத்ததால் யாராலும் அவரை மாற்ற முடியவில்லை என்றும் ரவிசாஸ்திரி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

தோனியின் விக்கெட் கீப்பிங் கை புகழ்ந்த ரவி சாஸ்திரி தோனி தான் மிக சிறந்த, வேகமான விக்கெட் கீப்பர் என்று புகழ்ந்துள்ளார். வழக்கமான பாணியில் இல்லாமல் தோனி வித்தியாசமானவர் என்றும் இளைஞர்கள் தோனியின் பாணியை பின்பற்ற வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார் ரவி சாஸ்திரி. காரணம் தோனிக்கு வைத்தது போன்ற மிகச் சிறந்த விக்கெட் கீப்பிங் அத்தனை பேருக்கும் வாய்க்காது. ஆகையால் அவர்கள் தோனியை பின்பற்றாமல் ஆரம்பத்திலிருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுத்தால் தான் ஜொலிக்க முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.