தன் படத்தை வரைந்த ரசிகருக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நகைச்சுவை பதில்

0
147
Ravi Shastri

இந்திய கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரிக்கும் முக்கியமான இடம் உண்டு. வலக்கை பேட்டிங், இடக்கை சுழற்பந்து வீச்சில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் 1981 முதல் 1992 வரை விளையாடி இருக்கிறார்.

ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் கிரிக்கெட்டில் 121 இன்னிங்ஸ்களில் 3830 ரன்களை 35.79 என்ற சராசரியில் அடித்திருக்கிறார். இதில் ஆஸ்திரேலியாவுடன் அவர்கள் நாட்டில் அடித்த ஒர இரட்டை சதமும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் 150 ஆட்டங்களில் 128 இன்னிங்ஸில் 3108 ரன்களை 29.04 என்ற சராசரியில் அடித்திருக்கிறார். பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 போட்டிகளில் 125 இன்னிங்ஸில் 151 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் 136 இன்னிங்ஸில் 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டிலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், பின்பு கிரிக்கெட் உலகில் வர்ணனையாளராகத் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராக உலகெங்கும் பறந்து வந்தார். இவர் கிரிக்கெட் ஆடும்பொழுது இவருக்கென்று ஒரு தனித்த இரசிகர் கூட்டம் இருந்தது போல, இவர் வர்ணனையாளராக இருக்கும் பொழுதும் ஒரு தனித்த இரசிகர் கூட்டம் இருந்தது. சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் வர்ணனையாளர் தொழிலுக்கே தற்போது ரவிசாஸ்திரி திரும்பி இருக்கிறார்.

இதற்கு நடுவில் 2014ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட இவர், அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியுடன் இணைந்து செயல்பட்ட விதம் கனம் ஈர்க்கவே 2017ஆம் ஆண்டு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய விளையாடிய காலங்கள், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே கூறலாம். கடந்த ஆண்டு நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையோடு இவரின் பதவிக்காலம் முடிந்து பயிற்சியாளராய் பொறுப்பிலிருந்து விலகினார்.

தற்போது தொலைக்காட்சியில் வர்ணனையாளராகவும், சமூக வலைத்தளத்தில் அதிரடியான விமர்சனங்களை முன் வைக்கக் கூடியவராகவும் வலம் வரும் ரவி சாஸ்திரி, நேற்று ட்வீட்டரில் “நான் இன்று சந்தோசமான மனநிலையில் இருக்கிறேன். எனவே என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு இரசிகர் அவரின் படத்தை பேனாவால் வரைந்து “ஸார் நான் இரண்டு மணி நேரமாக கஷ்டப்பட்டு உங்களை வரைந்திருக்கிறேன். ஏதாவது கூறுங்கள்” என்று கேட்க, அந்த இரசிகர் வரைந்திருந்த அவரது படத்தைப் பார்த்த ரவி சாஸ்திரி “தயவுசெய்து இதை அழிச்சிருப்பா”னு கமெண்ட் செய்ய. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தது. எப்பொழுதும் மிடுக்காய் இருக்கும் ரவி சாஸ்திரி நகைச்சுவையாய் பதிலளித்தது ஆச்சரியமாகவும் இருக்கிறது!

- Advertisement -