ஒரு அரைசதம் போதும்.. எல்லாரும் வாய் மூட.. கோலிக்காக வரிந்து கட்டிய ரவி சாஸ்த்ரி

0
43

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் விளாசி கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வரும் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

விராட் கோலியின் பேட்டிங் குறித்து தாம் இதுவரை அவரிடம் பேசவில்லை என்று குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, முக்கிய கட்டத்தில் சிறந்த வீரர்கள் ஜொலிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். விராட் கோலிக்கு ஓய்வு தேவைப்பட்டது என்று குறிப்பிட்ட ரவி சாஸ்திரி சில சமயம் தொடர்ந்து விளையாடினால் மன அழுத்தமே வீரர்களை பாதித்துவிடும் என்று குறிப்பிட்டார்.

உலகில் உள்ள அனைத்து வீரர்களுமே இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விராட் கோலி ஓய்வு நேரத்தில் எப்படி சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்பதை அவரே பரிசோதித்துப் பார்த்திருப்பார் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்தார். ஓய்வுக்குப் பிறகு விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளதால் அவருடைய மனம் அமைதியாக இருக்கும், எந்த நெருக்கடியும் தற்போது அவருக்கு இருக்காது என்றும் நபி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் மீண்டும் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த இது தலைகீழாக கூட நடக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அவர் அரைசதம் முதல் போட்டியிலே அடித்து விட்டால் இங்கு அனைவரின் வாய்களும் மூடிவிடும் என்றும் ரவி சாஸ்திரி காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். எனவே விராட் கோலி அந்தப் போட்டியில் தனது பழைய பாமை மீட்பார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -