ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம் – அதுவும் உலக கோப்பை ஆண்டிலா? சரி வருமா

0
5176

டி20 கிரிக்கெட்டின் வருகையின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டெஸ்ட் போட்டிகள் தற்போது ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஆசஸ், பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் பல்வேறு போட்டிகள் கடைசி நாள் வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதே போன்று டி20 கிரிக்கெட்டும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் ஆட்டத்தை 40 ஓவராக குறைப்பது தான் ஒரே வழி. ஏனென்றால் நாங்கள் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் 60 ஓவராக இருந்தது.

அதன் பிறகு ரசிகர்களின் கவனம் ஒருநாள் கிரிக்கெட் மீது குறைய தொடங்கியது. இதனை அடுத்து போட்டிகள் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டு தற்போது வரை அப்படித்தான் நடைபெற்று வருகிறது. தற்போது அதேபோன்று ஒரு சூழல் மீண்டும் வந்துள்ளது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவராக குறைக்கும் நேரம் வந்துவிட்டது.

- Advertisement -

கிரிக்கெட் வளர தற்போது டி20 கிரிக்கெட் தான் மிகவும் முக்கியம். டி20 விளையாட்டு மூலம் தற்போது நிறைய காசு கிடைக்கிறது இதேபோன்று உலகம் முழுவதும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால் இருதரப்பு டி20 தொடரை நடத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த லீக் தொடர்கள் நடத்த முடியும்.

உலக கோப்பை டி20 தொடரில் அனைத்து நாடுகளும் விளையாடட்டும். வேண்டுமென்றால் டி20 உலக கோப்பைக்கு முன்பு இருதரப்பு தொடரை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால்தான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த முடியும். டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் போல் இருக்க வேண்டும். அதற்கு தான் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதுதான் உண்மையான கிரிக்கெட் போட்டி. என்னை கேட்டால் இந்தியாவில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த முடியும். இங்கு ரசிகர்கள் மூன்று வகையான தொடரையும் பார்ப்பார்கள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்பு ரவி சாஸ்திரி சொன்ன யோசனை கொண்டு வருவது சரி வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு முனையிலும் புதிய பந்து என்ற முறையை ரத்து செய்தாலே சரியாக இருக்கும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.