மீண்டும் மீண்டும் அதே தவறை அவர் செய்யக்கூடாது, விராட் கோலியை அவர் பின்பற்ற வேண்டும் – அதிரடி இந்திய வீரருக்கு ரவி சாஸ்திரி வேண்டுகோள்

0
91
Virat Kohli and Ravi Shastri

இந்திய அணிக்கு 2015 முதல் தற்போது வரை மொத்தமாக 13 டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடி இருக்கிறார். அதேபோல கடந்த ஆண்டு ஒரு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடினார். இருப்பினும் இதுவரை சர்வதேச அளவில் இந்திய அணிக்கு ஒரு அரைசதம் கூட சஞ்சு சாம்சன் அடித்ததில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு அந்த அணியில் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது. அவருடைய தலைமையில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சற்று நன்றாகவே விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர்களின் கூட 3 போட்டியில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது சஞ்சு சாம்சன் விராட் கோலியை பின்பற்றி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் அதே தவறை அவர் செய்யக்கூடாது என்றும் இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அவரிடம் பொறுமை நிறைய இருக்கிறது

இதுபற்றி பேசிய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சஞ்சு சாம்சன் சற்று பொறுமையாக காணப்படுகிறார். அவருக்கு ஏற்ற அணி தற்போது அமைந்துள்ளது. அவர் இனி எந்தவித பயமுமின்றி அவருடைய இயல்பான ஆட்டத்தை நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தலாம்.

சஞ்சு சாம்சன் ஹைதராபாத் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியில் 55 ரன்களும் மும்பை அணிக்கு எதிராக 2-வது போட்டியில் 30 ரன்களும் குவித்தார். மூன்றாவது போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 8 ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.

தற்பொழுது அதை சுட்டிக்காட்டி,”மீண்டும் மீண்டும் ஒரே தவறை சஞ்சு சாம்சன் இனி செய்யக்கூடாது. தொடர்ச்சியாக அவர் சிறப்பாக விளையாட வேண்டும். உதாரணத்திற்கு டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் விராட் கோலி எதிரணியை நன்கு கவனித்து பொறுமையாக நிதானமாக விளையாடுவார். அதேசமயம் தொடர்ச்சியாக பெரிய ஸ்கோர்களை அடுத்தடுத்த போட்டிகளில் குவிக்கும் பழக்கம் அவரிடம் உள்ளது.

சஞ்சு சாம்சன் தற்பொழுது விராட் கோலியின் பாணியை பின்பற்ற வேண்டும். முன்புபோல இல்லாமல் இனி அவர் தொடர்ச்சியாக சிறப்பான இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அவருடைய அணிக்கு பெரிய ஸ்கோர்களை இனி அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர் அடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தன்னுடைய நான்காவது போட்டியில் லக்னோ அணியை வருகிற 10ஆம் தேதியன்று எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.