கிரீஸை விட்டு ஒரு சில அடிகள் முன்னேறினால் எந்தவித பாரபட்சமும் பார்க்காதீர்கள் – மான்கன்ட் விதிமுறை குறித்து அஷ்வின் அதிரடி பேச்சு

0
44
Ravichandran Ashwin about Mankanding

சமீபத்தில் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஐசிசி விதிமுறையின் கீழ் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சில முக்கிய விதிமுறையை திருத்தி எழுதியுள்ளது. அதில் நாம் பார்க்கப் போகும் முக்கியமான ஒரு விதிமுறை மன்கட் விதிமுறை பற்றிதான்.

போட்டியில் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே நான் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் ஒரு சில அடிகள் கிரீசை விட்டு முன்னேறிச் செல்லும் பட்சத்தில், பந்துவீச்சாளர் தன்னுடைய பந்துவீச்சை நிறுத்தி அவரை ரன் அவுட் செய்யலாம். இதுவே மன்கட் விதிமுறை என்று கூறப்பட்டு வந்தது.

2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கூட ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லரை இந்த விதி முறையின்படி அவுட் ஆக்கினார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த செயலுக்கு ஒரு சிலர் வரவேற்பு கொடுத்து நிலையில் ஒரு சிலர் குறைகளைக் கூறி வந்தனர். கிரிக்கெட் விளையாட்டில் இது ஆரோக்கியமான விஷயமல்ல என்பது போல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தனர்.

அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் என்று கூறியுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்

இனி பந்துவீச்சாளர் மன்கட் விதிமுறைப்படி பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்து கொள்ளலாம் என்று மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. நியாயமற்ற முறையல்ல என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும் இந்த விதி முறைப்படி ஒரு போட்டியில், எந்த வீரரை வேண்டுமானாலும் பந்து வீச்சாளர் அவுட்டாக்கலாம் என்றும் கூறியுள்ளது.

உங்களுடைய கேரியர் தான் முக்கியம்

மன்கட் விதி முறையை பயன்படுத்தி மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இது சம்பந்தமாக பேசி உள்ளார். பந்துவீச்சாளர் இவ்வாறு பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்வது நியாயமற்ற முறை கிடையாது. பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே ஒரு சில அடிகள் அந்த பேட்ஸ்மேன் முன்னேறுவது தான் நியாயமற்ற முறை.

முன்பெல்லாம் இவ்வாறு ஒரு சில அடிகள் முன்னேறும் பேட்ஸ்மேனுக்கு பந்துவீச்சாளர்கள் ஒரு எச்சரிக்கை கொடுப்பார்கள்.தற்பொழுது இந்த விதிமுறை அதிகாரபூர்வமாக உள்ளது. இனி பந்துவீச்சாளர்கள் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம்.

நீங்கள் அவ்வாறு இரக்கம் காட்டும் நிலையில் அதற்கு அடுத்த பந்தே அந்த பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நீங்கள் அவரை அவுட்டாக்கும் வேலையில் அதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எப்போதும் உங்களது கேரியர் தான் உங்களுக்கு முக்கியம்.

உங்களுடைய ஓவரில் அவ்வாறு பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் உங்களுடைய கேரியர் கீழே தான் செல்லும். அதே சமயம் நீங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினால் மட்டுமே உங்களுடைய கேரியர் மேல்நோக்கிச் செல்லும். எனவே இதில் எந்தவித பாரபட்சமும் பார்க்க வேண்டாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.