டெல்லி அணி தக்க வைக்கவிருக்கும் வீரர்கள் இவர்கள் தான் ; நானும் ஐயரும் இல்லை – அஷ்வின் ஓப்பன் டாக் ; சி.எஸ்.கேவுக்கு திரும்புவாரா அஷ்வின் ?

0
375
Shreyas Iyer and Ashiwn not Retained by DC

தற்போதுதான் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது போல் இருந்தாலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இப்போதே ஒவ்வொரு அணிகளும் இறங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக எந்த 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எந்த வீரர்களை ஏலத்திற்கென விட்டுவிட வேண்டும் என்பதில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக முனைப்பு காட்டுகின்றன. அடுத்த ஆண்டு ஐபிஎல் இந்திய நாட்டில் நடைபெறும் என்பதால் இந்திய மைதானங்களுக்கு ஏற்ப வீரர்களை தக்க வைக்க அந்தந்த அணி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.

இன்னமும் மாதக்கணக்கில் அவகாசம் இருந்தாலும் தற்போதே பலரும் இந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கணிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட காத்திருக்கும் ஒரு முன்னணி வீரரே எந்த அணி எந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்று தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் இதை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அனைத்து அணிகளையும் பற்றியும் பேசிய அவர் தான் விளையாடும் டெல்லி அணியை பற்றியும் பேசியுள்ளார். நான்கு வீரர்களை மட்டுமே ஒரு அணி தக்க வைத்துக் கொள்ள அனுமதி என்பதால் டெல்லி அணி தன்னை தக்க வைக்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஒரே ஒரு வெளிநாட்டு வீரராக நோர்க்கியாவை டெல்லி அணி தன் வசம் வைத்துக் கொள்ளும் என்று கூறியுள்ளார். இந்திய வீரர்கள் குறித்து பேசும்போது பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் நிச்சயமாக டெல்லி அணியில் நீடிப்பார் என்பதையும் உறுதி செய்துள்ளார். மூன்றாவது இந்திய வீரருக்கான இடம் தான் தற்போது இருப்பதாகவும் அதற்கு பல வீரர்கள் டெல்லி அணியில் போட்டிப் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடிய ஸ்ரேயாசையும் டெல்லி அணி தக்க வைக்கப் போவதில்லை என்று கூறினார். நிச்சயம் தன்னையும் தக்க வைக்கப் போவதில்லை என்றும் அப்படி ஒருவேளை தன்னை தக்க வைக்கப் போகும் எண்ணம் இருந்தால் இந்த நேரத்தில் அவருக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அஸ்வின் தற்போது சிறப்பாக பந்துவீசி 20 ஓவர் இந்திய அணிக்கும் திரும்பி விட்டதால் இந்த முறை அவர் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு விளையாடப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -