ரஷீத் கான் தேர்ந்தெடுத்த 4 சூப்பர் ஹீரோக்கள் – அப்பட்டியலிலும் இடம் பிடித்த தோனி

0
122
Rashid Khan and MS Dhoni

மாடர்ன் டே கிரிக்கெட் போட்டிகளில் ஆகச்சிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர் யார் என்று கேள்வி எழுப்பினால் பெரும்பாலான பதில் ரஷித் கான் என்றுதான் வரும். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் இளம் வயதிலேயே நிறைய சாதனைகளை படைத்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பெருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

இருபத்தி மூன்று வயதே ஆன இவர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்காக டி20 போட்டிகளில் விளையாடுவதை தாண்டி, ஐபிஎல், பி பி எல் என சர்வதேச அளவில் நடைபெறும் பெரும்பாலான டி20 தொடர்களில் பிஸியாக விளையாடி வரும் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர். இதுவரை மொத்தமாக 288 டி20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார்.

அந்த 287 டி20 போட்டிகளில் இதுவரை மொத்தமாக 399 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் இவரது பௌலிங் ஆவெரேஜ் 17.3 மற்றும் எக்கானமி 6.35 மட்டுமே. டி20 போட்டியில் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ரஷித் கானின் சூப்பர் ஹீரோக்கள்

உலக அளவில் தன்னுடைய அபாரமான சுழல் பந்து வீச்சால் நிறைய ரசிகர்களை ரஷித் கான் சொந்தமாக்கி இருக்கிறார். இவரிடம் சமீபத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுடைய சூப்பர் ஹீரோ யார் என்பதுதான் அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்கு ரஷித் கான் 4 பதில்களை தற்பொழுது கொடுத்துள்ளார். அவர் கூறிய அந்த 4 சூப்பர் ஹீரோக்களில் முதல் இரண்டு சூப்பர் ஹீரோக்களாக தன்னையும், தன்னுடைய தந்தையையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

மீதம் இரண்டு சூப்பர் ஹீரோக்கள் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி என்று கூறியுள்ளார். அவர் கூறிய பதிலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெற்றது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விவரம் புரிந்தவர்களுக்கு இது அவ்வளவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

மகேந்திர சிங் தோனியை பின்பற்றும் பல இளம் கிரிக்கெட் வீரர்களில் ரஷித் கானும் ஒருவர். மகேந்திர சிங் தோனி இடம் பேச வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ரஷித் கான் பேசியிருக்கிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக விளையாடும் போட்டிகளில், மகேந்திர சிங் தோனி இடம் நீண்ட நேரம் ரஷித் கான் உரையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் கூறிய பதிலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெற்றது, மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்திற்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.