ரஷித் கான் முன்வைத்த கோரிக்கை ; வில்லியம்சனா அல்லது ரஷித்கானா என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

0
138
Rashid Khan SRH Retention in IPL 2022

டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு ஆக வேண்டிய வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டன, அந்தந்த அணிகள். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்க இருப்பதால் தற்போது ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும், யாரை விடுவிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் யார் யாரை தக்கவைக்க போகிறார்கள் என்பதை வரும் நவம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு அணிகளும் அறிவிக்க வேண்டியது உள்ளதால் முழு வீச்சில் இந்த வேலைகளை ஒவ்வொரு அணியும் கவனித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கிய அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டேவிட் வார்னர் தலைமையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்ப்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கேப்டன் வார்னருக்கும் அணி நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட சிறு சிறு சிக்கல்களால் வார்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போதைய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் ஆக்கப்பட்டார். ஆனால் அதுவும் பெரிய அளவில் கைகொடுக்காமல் ஹைதராபாத் அணி லீக் சுற்றோடு தொடரை முடித்துக் கொண்டது. தற்போது அடுத்த ஆண்டு தக்கவைக்க போகும் வீரர்கள் வரிசையில் நிச்சயம் வார்னர் இருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி வில்லியம்சன் மற்றும் ரஷித் கானை தக்க வைக்க அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் வில்லியம்சனை முதல் வீரராகவும் ரசித் கானை இரண்டாவது வீரராகவும் தக்கவைக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரஷீத் கான் தன்னை முதல் வீரராக தக்கவைக்க வேண்டும் என்று கூறுவதாக தெரியவந்துள்ளது. காரணம் முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 16 கோடி ரூபாயும் இரண்டாவதாக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயும் கிடைக்கும். இதனால் ரசித் கான் தன்னை முதல் வீரராக தக்கவைக்க விருப்பப்படுடுவதாக கூறியுள்ளார்.

தனியாளாக ஹைதராபாத் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்த ரஷித் கானை முதல் வீரராக தக்க வைப்பதா அல்லது வருங்காலத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கேப்டனாக இருக்கப்போகும் வில்லியம்ஸனை முதல் வீரராக தக்கவைப்பதா என ஹைதராபாத் அணி நிர்வாகம் பெரும் குழப்பத்தில் உள்ளது. விரைவில் அந்த அணி நிர்வாகம் யாரை தக்க வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கப் போவதால் யாருக்கு அதிகத் தொகை கிடைக்க போகிறது என்று சில நாட்களில் தெரிந்துவிடும்.
.