24 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்; ரெக்கார்டுகளை உடைத்த ரஷீத் கான்!

0
612

அனைத்துவித டி20 போட்டிகளில் சேர்த்து 500 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார் ரஷீத் கான்.

24 வயதான ரஷீத் கான், சர்வதேச டி20 போட்டிகள், டி20 லீக் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார். மிகவும் இளம் வயதில் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கடந்தவர் என்கிற சாதனையை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

மேலும் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டிவைன் பிராவோ இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

சவுத் ஆப்பிரிக்காவில் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. எம்ஐ கேப்டவுன் அணிக்காக ரஷீத் கான் விளையாடி வருகிறார். பிரெட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின் போது, ரஷீத் கான் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியபோது டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்கிற மைல்கல்லை எட்டினார்.

அனைத்து வித டி20 போட்டிகளிலும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

- Advertisement -
  1. டிவைன் பிராவோ – 614 விக்கெட்டுகள்
  2. ரஷீத் கான் – 500 விக்கெட்டுகள்
  3. சுனில் நரேன் – 474 விக்கெட்டுகள்
  4. இம்ரான் தாஹிர் – 466 விக்கெட்டுகள்
  5. சாகிப் அல் ஹசன் – 432 விக்கெட்டுகள்.

ரஷித் கான், ஆப்கானிஸ்தான் போன்ற மிகச் சிறிய அணியிலிருந்து வந்து உலகின் பல்வேறு லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். குறிப்பிடத்தக்க விதமாக ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது குஜராத் டைட்டான்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

பிக் பாஸ் லீக்கில் அடிலேட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினால் வாங்கப்பட்டுள்ள எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.