ரஞ்சி கிரிக்கெட் இளம்வேக பந்துவீச்சாளர் மரணம்! – ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள்!

0
6427

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான ரஞ்சித் டிராபி கிரிக்கெட் போட்டிகள் தற்போது இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன . நான்கு சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சுற்று போட்டிகள் வருகின்ற 17ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது .

பில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இமாச்சலப் பிரதேஷ் மற்றும் பரோட்டா அணிகள் ரஞ்சிப் போட்டியில் மோதின . இந்த ஆட்டமானது டிராவில் முடிந்தது . இதில் முதலில் ஆடிய பரோடா அணி 355 ரன்கள் ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து ஆடியோ இமாச்சல பிரதேசம் 561 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது . இரண்டாவது இனிப்பு சுவை தொடர்ந்த ஆடிய பரோடா 216 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது நான்கு நாள் ஆட்டம் முடிந்ததால் போட்டி ட்ராயிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது . பரோடா அணியில் கேப்டன் விக்ரம் சொலாங்கி அதிகபட்சமாக 175 ரன்கள் அடித்திருந்தார் . ஹிமாச்சலப் பிரதேஷ் அணியில் கேப்டன் அங்கீத் கல்சி 145 ரண்களும் பிரசாந்த் சோப்ரா 159 ரண்களும் எடுத்தனர் .

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இமாச்சலப் பிரதேஷ் அணியின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் 28 வயதான சித்தார்த் சர்மா மூச்சு விடுவதில் சிறந்தவர் இருப்பதாக பணி நிர்வாகத்திடம் கூறினார் இதனால் அவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி பரோடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது சுவாச பிரச்சனை இன்னும் தீவிரமடைந்தது இதனால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது கிரிக்கெட் வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான இளம் வேகபந்துவீச்சாளர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

இது குறித்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ள இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ” எல்லா மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரிக்கெட் வீரர்களின் உடல் நலம் தொடர்பாக குறிப்பிட்ட கால அளவுகளில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் . அதிகமான கிரிக்கெட் போட்டியின் காரணமாக வீரர்கள் பெரும்பாலும் பயணங்களிலும் போட்டிகளிலுமே இருக்கின்றனர் . அதனால் அவர்களின் அக்கறையில் கவனம் எடுத்துக் கொள்வது கிரிக்கெட் சங்கங்களின் பொறுப்பு தான் . சித்தார்த்தின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் . என்னுடைய நினைவுகள் எல்லாம் அவர் குடும்பத்தினருடைய இருக்கின்றன” என்று பதிவிட்டு இருக்கிறார்.

சமீப காலமாகவே இளம் கிரிக்கெட் வீரர்கள் மாரடைப்பு மற்றும் இது போன்ற நோய்களால் மரணம் அடைவது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . வீரர்கள் தங்களது விளையாட்டு உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது .

ரஞ்சித் டிராபிக் கிரிக்கெட் போட்டியில் 2017 ஆம் ஆண்டு பெங்கால் அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்வை துவக்கியவர் சித்தார்த் ஷர்மா . இதுவரை 6 முதல் தர போட்டிகளில் ஆடி உள்ள அவர் 25 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் ,69/5 எடுத்தது அவரது சிறப்பான பந்துவீச்சு ஆகும் . இமாச்சலப் பிரதேச அணிக்காக 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி உள்ள அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்