நீங்க என்ன பண்ணினாலும் இத மட்டும் தடுக்கவே முடியாது – இந்திய அணிக்கு சவால் விடும் ரமீஸ் ராஜா

0
629

2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டி தொடர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தினம் ஒரு சர்ச்சை வெடித்துக் கொண்டுள்ளது . இந்த போட்டிகள் தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் சா இந்தியா போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்லாது என்று தெரிவித்திருந்தார் . இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் சேர்மன் ரமீஸ் ராஜா இந்திய அணி ஆசிய கோப்பையை புறக்கணிக்கும் பட்சத்தில் நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளின் போது இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா “இந்திய அணி அவர்களுடைய அரசியல் சூழ்நிலை காரணமாக அவர்கள் பாகிஸ்தான் வந்து விளையாடாமல் இருக்கலாம் அதற்காக எங்கள் நாட்டில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பையை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார் ,

அப்பொழுது நிருபர் ஒருவேளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார், இதற்கு கோபமாக பதில் அளித்த ரமீஸ் ராஜா ” ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டி தொடரை நடத்த எங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது ஒருபோதும் நாங்கள் இந்த உரிமையை விட்டு தர மாட்டோம் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் தான் நடக்கும் ஒருவேளை துரதிஷ்டவசமாக போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து மாற்றப்படுமானால் நாங்கள் ஆசிய கோப்பையை புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார் .

மேலும் அவர் ஒருபோதும் இந்த போட்டி தொடரை பாகிஸ்தானில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் தற்பொழுது தான் பாகிஸ்தானிற்கு உலக நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன இந்நிலையில் எங்களுக்கு ஆசிய கோப்பை போன்ற ஒரு பெரிய போட்டி தொடரை நடத்த அனுமதி கிடைத்திருப்பது என்பது பெரிய விஷயம் எனவே எங்களால் இந்த போட்டியை விட்டு தர முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இதே ரமீஸ் ராஜா தான் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் உலக ரசிகர்கள் யார் கிரிக்கெட்டை பார்ப்பார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இந்திய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

2023 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஆசியக் கோப்பை போட்டி தொடர் நடப்பதால் அந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது . உலக கோப்பைக்கு தயார் படுத்துவதற்கு அந்தப் போட்டிகள் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .