கேஎல் ராகுலை பாத்து இந்த விஷயத்தை விராட் கோலி கத்துக்கணும் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

0
237
KL Rahul and Virat Kohli Test

நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுலிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் பேட்டிங் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அதிக பட்ச ரன்கள் எடுத்து வீரர் கேஎல் ராகுல் தான். மாறாக விராட் கோலியோ தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

பாகிஸ்தான் அணிக்காக சுமார் 8674 ரன்கள் எடுத்து வீரர் ரமீஸ் ராஜா. மேலும் பாகிஸ்தான் அணி வென்ற 1992 உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்திருந்தார் ரமீஸ் ராஜா. பொறுமையாக ஆட்டத்தைக் கட்டமைத்து அணியை வெற்றிக்கு நேராக அழைத்துக் செல்லும் வீரர் ரமீஸ் ராஜா.

Virat Kohli and KL Rahul

இவர் தற்போது நடக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் குறித்து தன் பார்வையைக் கூறியுள்ளார்.தனது யூ-டியூப் சேனலில் பேசிய ரமீஸ் ராஜா, மிகப் பெரிய வீரர்களும் சங்கடப்படாமல் இளம் வீரர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர் கூறுகையில், ராகுல் தான் எங்கு நிற்கிறோம், நமது ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பதில் தெளிவாக இருந்தார். விராட் கோலியிடம் அது இல்லை. அதுவும் போக பேட்டை இறுக்கமாக பிடிக்காமல் சாப்ட் ஹாண்ட்ஸ் முறையில் ஆடி அவர் அதிக நேரம் களத்தில் செலவு செய்ய வேண்டும். இதை ராகுலிடம் இருந்து அவர் கற்க வேண்டும் என கூறினார்.

விராட் கோலி மற்றும் சட்டேஷ்வர் புஜாரா என இருவருமே சிறப்பான பந்து வீச்சில் தான் அவுட் ஆயினர். ஆனால் புஜாராவின் ஃபுட் ஒர்க் மிகவும் மோசமாக இருந்தது. இந்த முறை பேட்டிங்கில் தான் அவர் அதிக முறை அவுட் ஆகிறார். இதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய அணி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்று கூறியுள்ளார் ரமீஸ் ராஜா.

விராத் கோலியும் களத்தில் அதிக நேரம் செலவழித்தால் தான் இந்தத் தொடரில் நல்ல முறையாக ஆட முடியும் என்று கூறினார் அவர். ரமீஸ் ராஜாவின் அறிவுரையை ஏற்று விராட் மீண்டு வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.