தென்னாபிரிக்கா டி20 தொடரில் ஆர்சிபி வீரர் அறிமுகமாகிறார் – PTI

0
2167

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரஜத் பட்டிடார் எடுக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனர். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க வீரர்கள் திருவனந்தபுரம் மைதானத்திற்கு வந்திறங்கி தங்களது பயிற்சிகளை துவங்கிவிட்டனர்.

முதல் கட்டமாக மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் நான்காம் தேதி வரை டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்திய அணி வீரர்கள் டி20 உலக கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா செல்கின்றனர். 15 வீரர்கள் மற்றும் நான்கு ரிசர்வ் வீரர்கள் என 19 பேர் ஆஸ்திரேலியா சென்ற பிறகு, இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா ஏ அணி பங்கேற்க இருக்கிறது.

ஷிகர் தவான் இந்த அணிக்கு தலைமை பொறுப்பேற்று விளையாட உள்ளார். சுப்மண் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இந்த அணியில் விளையாடுகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரராக இருப்பதால் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. அந்த இடத்திற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த ராஜத் பட்டிடார் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேஷ் அணிக்காகவும் அபாரமாக செயல்பட்டார். தொடர்ந்து மிக சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் இவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்க உள்ளது.

இதற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “ரஜத் பட்டிடார் தற்போது இருக்கும் பார்மிற்கு நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரராக ஆஸ்திரேலியா செல்வதால் மிடில் ஆர்டரில் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு இவர் தான் முதன்மையான வீரராக இருக்கிறார்.” என்று தெரிவித்தார்.