மும்பை இந்தியன்ஸை பார்த்தாலே அடிப்பேன் – பட்லர் நிதான சதம் ; மும்பைக்கு எதிராக மேலும் சில சாதனைகள் படைப்பு

0
172
Jos Buttler 100 vs Mumbai Indians

ஐ.பி.எல்-ன் பதினைந்தாவது சீஸனில், இருபோட்டிகளுக்கான சனிக்கிழமையின் முதல் போட்டியில் ரோகித் சர்மாவின் மும்பை அணியும், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணியும், டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் தர வந்த ஜெய்ஸ்வாலும், பேட்டிங் வரிசையில் அடுத்து வந்த படிக்கல்லும் ஏமாற்ற, ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் ஒருமுனையில் நின்றுகொண்டு அம்புபோல், மும்பை பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரையும் விதவிதமாய் குறிவைத்துத் தாக்கினார்.

ஜோஸ் பட்லரின் சராமாரி தாக்குதல் தொடர தொடர, இன்னொரு முனையில் ஆட வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 30 [21], சிம்ரன் ஹெட்மயர் 35 [14] என அவர்களும் தங்கள் பங்கிற்கு, மும்பை பந்துவீச்சாளர்களைத் தாக்க, பந்து மைதானத்தின் நாலாபுறத்திலும் தெறித்துக்கொண்டிருந்தது.

அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் 66 பந்துகளில் 100 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இது ஐ.பி.எல்-ல் அவரது இரண்டாவது சதம். ஐ.பி.எல்-ல் அவரது இரண்டாவது சிறந்த அதிகபட்ச ரன்களாகும். ஐ.பி.எல்-ல் மும்பை என்றாலே ராஜஸ்தான் அணியும், ஜோஸ் பட்லரும் தனிவிதத்தில் ரன் விருந்து வைப்பது வழக்கமாகி வருகிறது. இறுதியாக இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்திருக்கிறது ராஜஸ்தான் அணி!

மும்பை அணியுடனான ஜோஸ் பட்லரின் கடைசி 5 இன்னிங்ஸ்கள் : 90* 89 70 41 100 என ஐந்து ஆட்டங்களில் 390 ரன்களை குவித்திருக்கிறார். ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தாலும் ஐ.பி.எல் வரலாற்றில் இது இரண்டாவது மெதுவான சதமாகப் பதிவாகி இருக்கிறது.

67 பந்துகள் மனீஷ்பாண்டே டெக்கான் சார்ஜர்ஸ்
66 பந்துகள் பட்லர் மும்பை
66 பந்துகள் சச்சின் கொச்சின்
66 பந்துகள் வார்னர் கொல்கத்தா
64 பந்துகள் பீட்டர்சன் டெக்கான் சார்ஜர்ஸ்
63 பந்துகள் விராட்கோலி குஜராத் லயன்ஸ்
63 பந்துகள் கே.எல்.ராகுல் மும்பை