மாஸ்டர் பிளான் போட்டு லக்னோவை மடக்கிய சாம்சன்.. ராஜஸ்தான் வென்றது எப்படி? – ஐபிஎல் 2024

0
279
Samson

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் முதல் போட்டியில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 11(9), ஜெய்ஸ்வால் 24(12) என சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான்காவது இடத்தில் ரியான் பராக்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவர் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து மிகச் சிறப்பாக இந்த முறை விளையாடினார். இந்த ஜோடி பொறுப்பாக விளையாடியதோடு அதிரடியாகவும் விளையாடியது.

- Advertisement -

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரியான் பராக் 29 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி மொத்தம் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதற்கு அடுத்து வந்த சிம்ரன் ஹெட்மையர் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து துருவ் ஜுரல் சஞ்சு சாம்சன் ஜோடி இணைந்தது. இவர்கள் இருவரும் கடைசிவரையில் விளையாடினால், இம்பேக்ட் பிளேயராக ரோமன் பவலை எடுக்காமல், பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க இளம் வேகபந்துவீச்சாளர் பர்கரை எடுத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலை இருந்தது.

இதற்கு தகுந்தபடியும் அதே சமயத்தில் அதிரடியாகவும் இந்த ஜோடி விளையாடியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காத கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன், 52 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரல் ஆட்டம் இழக்காமல் 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 20 ரன்கள் எடுத்தார். நவீன் உல் ஹக் நான்கு ஓவர்களுக்கு 41 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் 4(5), தேவ்தத் படிக்கல் 0(3), ஆயுஸ் பதோனி 1(5), தீபக் ஹூடா 26 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கேப்டன் கேஎல்.ராகுல் உடன் நிக்கோலஸ் பூரன் இணைந்து இருவரும் அணியை மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தபொழுது, கேப்டன் கேஎல்.ராகுல் 44 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஷ் 3(4) ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து நிக்கோலஸ் போறன் உடன் குர்னால் பாண்டியா இணைந்தார். கடைசி ஓவருக்கு மொத்தம் 27 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஆவேஸ் கான் ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்தார். நிக்கோலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 4 பவுண்டரி 4 சிக்ஸர் உடன் 41 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : BAN vs SL.. ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த 2 வீரர்கள்.. பங்களாதேஷ் பரிதாபம்

இந்த போட்டியில் லக்னோ அணி நான்கு விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்திருந்தது. கே எல் ராகுல் மற்றும் பூரன் களத்தில் இருக்கும் பொழுது 5 ஓவர்களுக்கு 60 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. சந்திப் சர்மாவை 14 ஓவர்கள் கழித்து கொண்டு வந்தது, அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் பொழுது அஸ்வினுக்கு ஓவர் தந்தது, இம்பேக்ட் பிளேயராக பேட்ஸ்மேன் வைக்காமல் பொறுமையாக இருந்து பவுலரை கொண்டு வந்தது என சஞ்சு சாம்சன் பேட்டிங் மட்டுமில்லாமல் கேப்டன்சியிலும் கலக்கி இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் போல்ட் 2, அஸ்வின் 1, சந்தீப் சர்மா 1, சாகல் 1விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.