டிவிட்டரில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனை கேலி செய்து பதிவிட்ட அட்மின் ; கடுப்பான சஞ்சு சாம்சன் – புகைப்படம் பதிவிட்டவர் பதவி நீக்கம்

0
80
Sanju Samson and RR Admin Post

ஐபிஎல் தொடர் நாளை முதல் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதனுடைய ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்க சமூக வலைதளங்களில் அணி சம்பந்தமான பதிவுகளை பதிவேற்றம் செய்வார்கள்.

இதற்கென தனியாக ஒரு நபரை நியமித்து அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பார்கள். பொதுவாக அந்த நபரை அந்த அணியுடைய பக்கத்தின் அட்மின் என்று அனைவரும் அழைப்பார்கள். மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் என அனைத்து அணிகளுக்கும் இவ்வாறு தனித்தனியே அட்மின் இருப்பார்கள். அவர்கள் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பதிவுகளை பதிவேற்றம் செய்து வருவார்கள்.

சஞ்சு சம்சன் குறித்து பதிவிட்ட ராஜஸ்தான் அணியின் அட்மின்

ருத்ர வலைதளத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அட்மின் கடந்த மாதம் முதலே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் வித்தியாசமான பதிவுகளை பதிவேற்றம் செய்து வந்தார். இன்று அப்படி அந்த அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் புகைப்படம் ஒன்றை சற்று எடிட் செய்து பதிவேற்றினார்.

சஞ்சு சாம்சனுக்கு தலையில் தொப்பியும், கூலிங்கிளாஸ், காதுகளில் தோடு மற்றும் லிப்ஸ்டிக் என சற்று நகைச்சுவையாக எடிட் செய்து ராஜஸ்தான் அணி அட்மின் பதிவு செய்திருந்தார்.

கோபப்பட்ட சஞ்சு சாம்சன்

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக, சஞ்சு சாம்சன் அந்த பதிவுக்கு எதிர் பதிவை பதிவு செய்துள்ளார். “நண்பர்களுக்குள் இப்படி விளையாட்டுத்தனமாக பதிவுகளை பதிவேற்றி விளையாடுவது சரி. ஆனால் அணி நிர்வாகம் தொழில் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்தல் கூடாது என்பது போல” கறாராக பதிவு செய்துள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிவிட்டர் பக்க அட்மின் வேலையிலிருந்து நீக்கப்பட போவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.