ஐபிஎல் மினி ஏலத்தில் ரெய்னா, கெயில் பங்கேற்பு.. முழு விவரம்

0
306

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் ஒரு வாய்ப்பாக ஐபிஎல் மினி என வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் ஐபிஎல் மினி ஏலத்திற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களுக்குள்ளே பயிற்சி ஏலத்தை நடத்தி மினி ஏலத்திற்காக தயாராகி வருகின்றனர். 404 வீரர்கள் ,87 இடங்களுக்காக ஏலத்தில் போட்டியிடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பிராவோ மற்றும் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்காக ஏற்கனவே விளையாடிய சாம்கரனை தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளது.

ஆனால் சாம் கரன் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதால் மாற்றி திட்டங்களையும் வகுத்துள்ளது . வரும் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகள் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒளிபரப்பு செய்யப்படாது. அதற்கு பதிலாக ஜியோ சினிமாவில் தான் போட்டிகள் ஒளிபரப்பப்படும். ஏற்கனவே கால்பந்து உலக கோப்பையை ஜியோ சினிமா தான் ஒளிபரப்பு செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஐ பி எல் மினி ஏலத்தையும் ஜியோ சினிமா தான் நேரலை செய்ய உள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, கிறிஸ் கெயில்,டிவில்லியர்ஸ் இயன் மார்கன் உள்ளிட்ட வீரர்களை நிகழ்ச்சியில் பேசுவதற்காக ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல நட்சத்திரங்களும் ஒரே ஸ்டூடியோவில் தோன்றுவதால் ஐபிஎல் மினி ஏலம் இம்முறை கலை கட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். எனினும் ஜியோ சினிமாவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டும் ரசிகர்கள் அதனை அவர்கள் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபில் மினி ஏலம் வரும் 23ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது.

- Advertisement -