ராகுல் டிராவிட் முதல்ல பேட்டிங் குறைபாடுகளை பத்தி பேசணும்; காம்பினேஷனை பத்தி இல்ல – சல்மான் பட் விளாசல்!

0
355
Salman Butt

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சல்மான் பட் , இந்திய-ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் , இரண்டாவது போட்டி, தோல்விக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கருத்து பற்றியும் , நேற்று அவருடைய யூட்யூப் பக்கத்தில் பேசி இருந்தார்.

சல்மான் பட் பேசுகையில்
” முதலில் உங்கள் பேட்டிங் குறைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று பாருங்கள். அணியின் காம்பினேசன் பற்றி பேசுவதை இத்தோடு விட்டுவிடுங்கள் . இதற்கு பின்னும் நீங்கள் எவ்வளவு மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார் .

- Advertisement -

மேலும் அவர் கூறுகையில் ” இந்த நேரத்தில், உங்களின் சிந்தனை அனைத்தும் மூன்றாவது ஒருநாள் போட்டியை எப்படி வெல்வது என்று இருக்க வேண்டும். யாராவது வேறு கேள்வி கேட்டால், அதற்கும் போட்டிக்கும் , எந்த தொடர்பும் இல்லை என்று நீங்கள் கூறலாம் ” என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 269 ரண்கள் சேர்த்தது. அதனை துரத்தி விளையாடிய இந்திய அணி 248 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதுபற்றி பேசிய சல்மான் பட் தனது பழைய கருத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார் .

சல்மான் பட் கூறுகையில்
“மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக மாற்றங்களைச் செய்வது குறித்து ராகுல் டிராவிட் பேசியிருக்கக் கூடாது என்று நான் கூறியபோது பலருக்கு அது மகிழ்ச்சி தரவில்லை . இது இப்போது பொருத்தமானதாகவே உள்ளது. தொடரை தீர்மானிப்பதர்க்கு முன்னதாக மாற்றங்களை அறிமுகப்படுத்துவது பற்றி பேச வேண்டாம். ஆனால் அது அவருடைய அணி, நான் எனது கருத்தைத் தெரிவித்தேன். முடிவு நம் முன்னே உள்ளது” என்றார் கூறினார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் குறித்து கூறும்போது
“இந்தியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்னவென்றால், அவர்களின் டாப் ஆர்டர் பேட்டர்கள்தான் , ரண் வேட்டையில் அவர்கள் யாரும் பொறுமையாக தட்டி விளையாடவில்லை. ரன் வேட்டையில் ஒரு பேட்டர் பெரிய ஸ்கோர் செய்திருந்தால் அது மிகவும் எளிதாக இருந்திருக்கும். அதில் ஒருவர் சதம் அடித்திருந்தால் இந்தியா இந்தப் போட்டியில் வென்றிருக்கும். இந்தியாவின் பலம் அதுதான். விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த காலங்களில் அவர்களுக்காக இதைச் செய்ததைப் பார்த்தோம் ” என்று கூறினார்