ஆஸி டெஸ்ட்ல.. கங்குலிக்கு இத செஞ்சது என்னோட தப்புதான்.. அப்பதான் இந்த முடிவு பண்ணேன் – டிராவிட் பேட்டி

0
247

இந்தியா கிரிக்கெட் அணி 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் அந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ராகுல் டிராவிட் தனது கேப்டன் கங்குலியை ரன் அவுட் செய்தது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கங்குலிக்கு நான் செய்த தவறு

கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 556 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி 85 ரன்கள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் கங்குலியை ராகுல் டிராவிட் ரன் அவுட் செய்தார்.

அதற்குப் பிறகு ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் கூட்டணி சிறப்பாக விளையாடி டிராவிட் 233 ரன்கள் மற்றும் லக்ஷ்மன் 148 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்த சூழ்நிலையில் தற்போது அது குறித்து பேசி இருக்கும் ராகுல் ராவிட் கேப்டன் கங்குலி ரன் அவுட் செய்தது தனது தவறு தான் என்றும் அதற்குப் பிறகு பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டு அர்த்தமுள்ள விஷயத்தை செய்ய நினைப்பதாக ராகுல் டிராவிட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து டிராவிட் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கேப்டன் கங்குலி ரன் அவுட் ஆகிவிட்டார். அந்த சூழ்நிலையில் அர்த்தமுள்ள ஒன்றைச் செய்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். கங்குலி ரன் அவுட் ஆனது முற்றிலும் என் தவறு. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் அந்த தவறு என்னுடையது தான். அப்போது சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

இதையும் படிங்க:பும்ரா காலத்தில் நான் ஆடுனா.. என்னோட இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணி அழுத்தம் கொடுப்பேன் – ரிக்கி பாண்டிங் பேட்டி

அந்த சூழ்நிலையில் சிறப்பான ஒரு பார்ட்னர்ஷிப் அமைவது முக்கியம். நீங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயற்சிக்கிறீர்கள், நீங்கள் வெற்றி இலக்கை அடைய முயற்சிக்கிறீர்கள். 556 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். எனவே அதற்கு நன்றாக விளையாடி ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று சிறப்பாக விளையாடினோம்” என்று ராகுல் டிராவிட் கூறினார். அந்தப் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற்ற சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -