ரோகித் சர்மா உள்ளிட்ட 3 பேர் இந்திய அணியிலிருந்து விலகல் – ராகுல் டிராவிட்

0
3378

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 69 நாட்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மெஹதி ஹசன், மகமுதுல்லாவின் அபார சதத்தால்  271 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல்  ஜோடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்து முக்கிய கட்டத்தில்  ஆட்டமிழந்தது. இதனை அடுத்து காயத்தையும் பொருட்படுத்தாமல் கேப்டன் ரோஹித் சர்மா களத்திற்கு வந்து 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். எனினும் இந்திய அணி கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , அது டாட் பாலாக மாற, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரையும் கைப்பற்றியது. இது குறித்து செய்தி அவர்களிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பல வீரர்களுக்கு காயம் பிரச்சினையாக இருப்பதாக குறிப்பிட்டார். முழு உடல் தகுதி இல்லாமல் வீரர்களை வைத்து விளையாடி வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்றும் ராகுல் டிராவிட் கூறினார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று குறிப்பிட்ட ராகுல் டிராவிட், விரலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து ஆலோசனை செய்வதற்காக ரோகித் சர்மா இன்று மும்பை கிளம்புவதாக டிராவிட் குறிப்பிட்டார். மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைக்குப் பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகள் பங்கேற்பாரா இல்லையா என்பது தெரியவரும் என்றும் ராகுல் டிராவிட் கூறினார். எனினும் டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் இருப்பதால் அது குறித்து இப்போதே பேசத் தேவையில்லை என்று டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

தீபக்சாஹருக்கு கால் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று குறிப்பிட்ட ராகுல் டிராவட், அறிமுக வீரராக களம் இறங்கிய குல்தீப் சென்னும் தொடரிலிருந்து வெளியேறி விட்டதாக டிராவிட் கூறினார். இதனால் வரும் சனிக்கிழமை நடைபெறும் மூன்றாம் ஒரு நாள் போட்டிகள் இந்திய அணி கைவசம் இருக்கும் வீரர்களை வைத்து களம் இறங்க உள்ளது. ரோகித் சர்மா இடத்திற்கு அணியில் இடம் பெற்றுள்ள இஷாந்த் கிஷன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் போன்று தீபக்சாகர் இடத்திற்கு வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியில் இல்லை. இதனால் ஷாபாஷ் அஹமத் என்ற சுழற்பந்துவீச்சாளரை இந்திய அணி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -