டிராவிட்டுக்கு பெரிய மனசு தான்.. பயிற்சியில் நடந்த சுவாரஸ்யம்

0
192

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டாக்காவில் தொடங்குகிறது. இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்ற முடியும். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வழி நடத்திய கேஎல் ராகுல் இரண்டாவது டெஸ்டிலும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் இந்த போட்டியை கண்டிப்பாக வென்றாக வேண்டும். முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றது. குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் முசிபிகுர் ரஹீம் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.18, 12 ,7, 28 ,23 ஆகிய ரன்களை தான் இந்தியாவுக்கு எதிராக அவர் தற்போது அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ரஹீம் நேரடியாக ராகுல் டிராவிடம் சென்று எனக்கு சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித் தாருங்கள் என்று கேட்டார் .அதற்கு டிராவிட் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் சுழற்பந்து எதிர்கொள்வது குறித்து அவருக்கு பயிற்சி அளித்தார். இதனை அடுத்து டிராவிட்டை கட்டி அணைத்து ரஹிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்திய அணியின் முக்கியமான தொடராக இது விளங்கும் நிலையில் ராகுல் டிராவிட் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் எதிரணியின் முக்கிய வீரருக்கு பயிற்சி அளித்த விஷயம் ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட்டை போல முதல் இரண்டு நாட்கள் பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக மாற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் டெஸ்டில் சொதப்பிய அஸ்வின் இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.