ரிஷாப் பண்ட்டின் சதத்தை உணர்ச்சி மயமாய் கொண்டாடிய ராகுல் டிராவிட் – வீடியோ இணைப்பு

0
126

இந்திய அணி கடந்த ஆண்டு கோவிட் காரணமாக விளையாட தவறிய ஒரு போட்டியை இங்கிலாந்திற்கு எதிராய் பர்மிங்காம் எட்ஜ்பஸ்டனில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கேப்டன் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட, ஜஸ்ப்ரீட் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இன்று இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான டாஸை ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். வானம் மேகமூட்டத்தோடும், ஆடுகளம் சற்று ஈரப்பதமாகவும் இருந்ததால், இந்த முடிவை இங்கிலாந்து கேப்டன் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் சுப்மன் கில்லோடு செதேஷ்வர் புஜாரா துவக்க வீரராக இருந்தார். அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ரவீந்திர ஜடேஜாவே தொடர்ந்தார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி, சர்துல் தாகூர், மொகம்மத் சிராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

- Advertisement -

இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்சை துவங்க சுப்மன் கில்லும் செதேஷ்வர் புஜாராவும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் வர இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் சிரமம் இன்றி விளையாடுவதாய் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களை வீசிய ஜேம்ஸ் ஆன்டர்சன் 17 ரன்னில் சுப்மன் கில்லையும், 13 ரன்னில் செதேஷ்வர் புஜாரைவையும் வெளியேற்றினார்.

இதற்கடுத்து ஹனுமா விகாரியும் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இதற்கிடையில் மழைவர ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. மழை நின்று களமிறங்கிய இந்திய அணிக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சற்று நேரத்தில் ஹனுமா விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 13 ரன்னிலும் மேத்யூ போட்ஸ் பந்தில் வெளியேறினார்கள். இது போதாது என்று அடுத்து வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் 15 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 98/5 என்று நெருக்கடியில் விழுந்தது.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், இரவீந்திர ஜடேஜா மிகப் பிரமாதமாய் விளையாடி இந்திய அணியை மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீட்டது. முதலில் அரைசதம் அடித்த ரிஷாப் பண்ட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் சதமடித்த பொழுது, இதுவரை பார்க்காத அளவில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உணர்ச்சிமயமாய் கொண்டினார்.

- Advertisement -

இதே ஓவரில் ஜடேஜா அரைசதம் அடித்தார். இதே ஓவரில் இந்திய அணியும் அரைசதம் அடித்தது. இறுதியில் நான்கு சிக்ஸர், பத்தொன்பது பவுன்டரியோடு 111 பந்தில் 146 ரன்கள் எடுத்த ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்தார். ரிஷான்-ஜடேஜா ஜோடி 222 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது!