“இது தப்புனா அதுவும் தப்பு” – ராகுல் சஹர் குறித்து நெட்டிசன்கள் கருத்து

0
2509
Rahul Chahar and Wanindu Hasaranga

இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டிய நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 130 ரன்களை குவித்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இப்போட்டியின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது .

இந்திய வீரர் ராகுல் 15வது ஓவரை வீசினார் . 14.5 வது பந்தில் இலங்கை வீரர் ஹசரங்க பவுண்டரி அடித்தார் . ஓவரின் கடைசி பந்தினை ராகுல் சஹர் வீச அந்த பந்தை எதிர்கொண்ட ஹசரங்கா பவுண்டரி அடிக்க்ஃ முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார் . தனது ஓவரில் பவுண்டரிக்கு அடித்த வீரரை அடுத்த பந்திலேயே விக்கெட் எடுத்தார் ராகுல் சஹர் .

- Advertisement -

ஹசரங்காவின் விக்கெட்டை வீழ்த்திய பின் உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு சென்று ஹசரங்காவை ஸ்லெட்ஜிங் செய்தார் ராகுல் சஹர். இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ஹசரங்கா ராகுல் சஹரை பேட்டால் கைத்தட்டி பாராட்டி சென்றார். இச்சம்பவம் வலைதளங்களில் பெரிய வைரலானது. ஹசரங்காவின் இச்செயலை பலரும் புகழ்ந்து தள்ளினார்கள். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கொண்டாடி வந்தார்கள். அதே சமயம் ராகுல் சஹரை கண்டித்தும் வந்தார்கள் . இது மோசமான நடவடிக்கை டிராவிட் கீழ் விளையாடுபவர்கள் எல்லாம் ஒழுக்கமாக இருப்பார்கள் ராகுல் சஹர் ஒழுங்கினமான செயல் கண்டனத்துகுறியது என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர் .

இது தப்புனா அதுவும் தப்பு

இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர் பிரித்திவி ஷாவின் விக்கெட்டை ஹசரங்கா வீழ்த்தியிருந்தார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பிரித்திவி ஷாவை ஸ்லெட்ஜிங் செய்து வம்பிழுத்துள்ளார் .

நேற்றைய போட்டியில் ராகுல் சஹரின் செய்கை தவறு என்றால் ஹசரங்காவின் செயலும் தவறு தான்.ஆட்டத்தின் போது வீரர்கள் தங்களது மகிழ்ச்சிகளை உணர்சிகளுடன் இணைத்து கொண்டாடுவது இயல்பு எனினும் ஒரு வீரரின் ஒரு செயல் தவறு என்று சித்தரிக்கும் போது அதே செயலை செய்த ஒருவரை பாராட்டுவதும் தவறான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது . தவறை யாரு செய்தாலும் தவறு தான் அது இந்திய வீரராக இருந்தாலும் சரி இலங்கை வீரராக இருந்தாலும் சரி என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -