சிஎஸ்கே-காக இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்து ரகானே சாதனை!

0
226
Rahane

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடந்து வருகிறது!

இந்தப் போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நல்ல விதத்தில் ஆரம்பித்தாலுமே, சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சான்ட்னர் இருவரும் மிக அபாரமாக பந்து வீசி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, மும்பை அணியின் முதுகெலும்பை உடைத்து விட்டார்கள்.

- Advertisement -

20 ஓவர்களை முழுமையாகச் சந்தித்து விளையாடிய மும்பை அணியால் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 21 பந்துகளில் 5 பவுண்டரி உடன் 32 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக டிம் டேவிட் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

கொஞ்சம் எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே டெவோன் கான்வே விக்கெட்டை எடுத்து பெஹரன்டாப் அதிர்ச்சி அளித்தார். ஆனால் இதற்குப் பிறகுதான் ஆட்டம் சென்னை அணியின் பக்கம் மாறியது.

இன்று மொயின் அலி விளையாடாத காரணத்தால் மூன்றாவது இடத்தில் வந்த இந்திய வீரர் ரகானே யாருமே எதிர்பார்க்காத விதத்தில் மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு ஷாட்களும் மிக நேர்த்தியாக இருந்தது.

- Advertisement -

ரகானே வெறும் 19 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் அரை சதத்தை எட்டி அசத்தினார். தற்போது இவர் அடித்துள்ள இந்த அரை சதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக இரண்டாவது அரைசதம் ஆகும்.

ரகானேவுக்கு முன்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்ததே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அதிவேக அரை சதம் ஆகும். கடந்த ஆண்டு மொயின் அலி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 19 பந்துகளில் அடித்தார். தற்பொழுது இதை ரன் வித்தியாசத்தில் முறியடித்து ரகானே இரண்டாவது அதிவேக அரை சதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிவு செய்திருக்கிறார்.

மிகச் சிறப்பாக விளையாடி வந்த ரகானே 27 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்று அவரது ஸ்ட்ரைக் ரேட் 225.92. இன்றைய போட்டியில் இவர் விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதேபோல் இந்த அளவுக்கு விளையாடுவார் என்றும் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தனது சிறப்பான கிளாசிக் பேட்டிங் மூலம் அசத்திவிட்டார் ரகானே!