நாயகன் மீண்டும் வருகிறார்.. இரட்டை சதம் விளாசிய ரஹானே

0
250

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்க்யா ரஹானே இரட்டை சதம் விளாசி அசத்தியிருக்கிறார். இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடராக கருதப்படுவது துலிப் கோப்பை தொடராகும்.
இதில் ஒவ்வொரு அணிகளும் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு மோதும். இதில் காலிறுதி ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு பிராந்திய அணிக்காக ரகானே உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். வடகிழக்கு பிராந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 11 பவுண்டர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் நட்சத்திர வீரர் ரஹானே ஜோடி சேர்ந்தார். ரஹானே போதிய ஃபார்மில் இல்லாத நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ரஹானே இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள ரகானே தற்போது துலிப் கோப்பையில் மேற்கு பிராந்திய அணிக்காக விளையாடினார்.

இதில் தொடக்கம் முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார். ஜெய்ஸ்வால் ஜோடியை ஆட்டம் இழக்க முடியாமல் வடகிழக்கு பிராந்திய அணிகள் வீரர்கள் திணறினர். 264 பந்துகளை எதிர்கொண்ட ரகானே 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 18 பவுண்டர்களும் ஆறு இமாலய சித்தர்களும் அடங்கும். ஜெய்ஸ்வால் 228 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் தற்போது ரகானே 207 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.

இதனால் ரகானே முச்சதம் விளாச வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி பார்ம்க்கு திரும்பிய நிலையில் தற்போது ரகானேவும் இரட்டை சதம் விளாசி இருப்பது இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான வரும் நவம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்தியனில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது