புஜாரா மற்றும் ரஹானேவுக்கு சம்பளம் குறைப்பு ; கூடுதல் தொகை பெறவுள்ள சிராஜ் – பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய சம்பளத் தொகுப்பு

0
717
Salary Grade Of Indian Players

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி என்று வந்துவிட்டாலே புஜாரா மற்றும் ரஹானே இவர்கள் இருவர் மீதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் இதற்கு முந்தைய வருடங்களில் இவர்கள் இருவரது சிறப்பான பேட்டிங் காரணமாக இந்திய அணி நிறைய போட்டிகளில் எதிரணியை சுலபமாக வீழ்த்தி வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் இவர்கள் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.

ரஹானே கடந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து 479 ரன்கள் குவித்திருந்தார். கடந்த ஆண்டு இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 20.82 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 43.03 மட்டுமே ஆகும். மறுபக்கம் புஜாரா 14 போட்டிகளில் விளையாடி 6 அரை சதங்களுடன் 702 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டு இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 28.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 34.17 என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சுமாராக விளையாடிய இவர்கள் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடுவார்கள் என்று அனைத்து ரசிகர்களும் நம்பினர். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் மீண்டும் சுமாராகவே விளையாடியுள்ளனர். புஜாரா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதத்துடன் 108 ரன்கள் மட்டுமே குவித்தார். ரஹானே 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதத்துடன் 68 ரன்கள் மட்டுமே குவித்தார்.

கிரேடு ஏ தரவரிசையில் இருந்து கிரேடு பி தரவரிசைக்கு கீழே இறங்கிய புஜாரா மற்றும் ரஹானே

பிசிசிஐ அதன் கீழ் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை மொத்தம் நான்கு தரவரிசைப்படி வகைப்படுத்தும். கிரேடு ஏ +, கிரேடு ஏ,கிரேடு பி மற்றும் கிரேடு சி என மொத்தம் நான்கு தர வரிசைகள் உள்ளன. கிரேடு ஏ + தரவரிசையில் உள்ள வீரர்களுக்கு அதிகபட்ச ஆண்டு வருவாயாக 7 கோடி ரூபாய் வழங்கப்படும். கிரேடு ஏ தரவரிசையில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு வருவாயாக 5 கோடி ரூபாயும், கிரேடு பி தரவரிசையில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு வருவாயாக 3 கோடி ரூபாயும், கிரேடு சி தரவரிசையில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு வருவாயாக ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும்.

புஜாரா மற்றும் ரஹானே இவர்கள் இருவரும் இதற்கு முன் கிரேடு ஏ தரவரிசையில் இருந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் மிக சுமாராக விளையாடி வருவதால் பிசிசிஐ அதிரடியாக இவர்கள் இருவரையும் கிரேடு ஏ தரவரிசையில் இருந்து கிரேடு பி தரவரிசைக்கு கீழே இறங்கியுள்ளது.

கிரேடு சி தரவரிசையிலிருந்து மேல் நோக்கி முன்னேறும் முகமது சிராஜ்

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த ஆண்டு கிரேடு சி தரவரிசையில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் கடந்த ஒன்றரை வருடத்தில் அவருடைய பந்துவீச்சை மிக அற்புதமாக இருந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இரண்டு போட்டிகளில் மிக அற்புதமாக அவர் பந்து வீசினார்.

மிக சிறப்பாக அவர் விளையாடி வருவதால் பிசிசிஐ அவரை கிரேடு சி தரவரிசையில் இருந்து கிரேடு பி அல்லது ஏ தரவரிசைக்கு மாற்ற இருப்பதாக தற்போது தகவல் உறுதியாகியுள்ளது. அதன்படி ஆண்டு வருவாயாக ஒரு கோடி ரூபாய் ஈட்டி வந்த முகமது சிராஜ் இனி, 3 அல்லது 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.