“சச்சின் மெகா சாதனையை உடைத்த ரச்சின்” – இந்திய வம்சாவளி வீரர் அதிரடி சதத்துடன் பேட்டிங் ஆதிக்கம்!

0
639
Rachin

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், காலிறுதி போட்டி போன்ற வாழ்வா? சாவா? போட்டியில், பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொஞ்சம் மேகமூட்டமாக இருந்ததால் பாகிஸ்தான் அணி இப்படியான முடிவுக்கு சென்றது. ஆனால் அந்த முடிவை தவறாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மாற்றி விட்டார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து அணியில் இந்த முறை கேப்டன் கேப்டன் வில்லியம்சன் திரும்ப வர வில் யங் நீக்கப்பட்டார். மேலும் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்தரா துவக்க வீரராக மேலே அனுப்பப்பட்டார்.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ரவீந்தரா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கான்வே 39 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்குப் பிறகு கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்தரவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் எல்லாப் பக்கங்களிலும் அடித்து நொறுக்கியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் கடந்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அணியின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இது மூன்றாவது சதமாகும். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 500 ரன்கள் தாண்டிய இரண்டாவது வீரராகவும் மாறினார்.

இந்த சதத்தின் மூலம் 23 வயதில் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்கின்ற சச்சின் சாதனையை உடைத்து இருக்கிறார். சச்சின் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். தற்போது இவர் மூன்று சதங்கள் நடித்திருக்கிறார். மேலும் உலகக்கோப்பையில் 23 வயதில் 500 ரன்களுக்கும் மேற்பட்டு ரன்கள் அடித்ததில் சச்சின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.