ஆவேஷ் கானுக்கு பதில் தீபக் சாஹரை சேருங்கள்.. காரணத்தை பட்டியலிடும் தமிழக வீரர் பாலாஜி

0
66


ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தீபக் சாஹர் இடம்பெற வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக விளையாடாமல் ஓவில் இருந்த தீபக் சாஹர், புது பந்தை நன்றாக ஸ்விங் செய்ய கூடியவர். மேலும் பேட்டிங்கில் அதிரடியாக ஆட கூடியவர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தனி ஆளாக நின்று அரைசதம் விளாசியது, யாராலும் மறக்க முடியாதது.

- Advertisement -


தீபக் சாஹர் அணிக்குள் வந்தால், இவரும், புவனேஸ்வர் குமாரும் பவர்பிளே ஓவர்களை வீசுவார்கள். இந்தியாவின் பேட்டிங்கும் அதிகரிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய கோப்பையில், ரிசர்வ் வீரராக மட்டும் தான் தீபக் சாஹர் அணியில் உள்ளார். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளருமான பாலாஜி அவேஷ் கானுக்கு பதிலாக தீபக் சாஹரை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


தீபக் சாஹர் தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பாலாஜி, ஆனால் காயம் காரணமா ஆறு மாதங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக சுட்டிக்காட்டினார். தீபக் சாஹர் ஒரு கடின உழைப்பாளி என்றும், அணியில் தேர்வாகவில்லை என்பது குறித்து அவர் கவலைப்பட மாட்டார் என்றும் பீலாஜி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளதால், அணியில் இடம் பிடிக்க வீரர்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது என்று பாலாஜி கூறியுள்ளார்.

- Advertisement -


தீபக் சாஹருக்கு இருக்கும் திறமைக்கு அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தீபக் சாஹர், தாம் தேர்வு செயும் அணியில் கண்டிப்பாக தீபக் சாஹர் இருப்பார் என்று கூறினார். துபாய் ஆடுகளத்தில் புது பந்தில் விக்கெட் வீழ்த்துவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட பாலாஜி, அதனை சிறப்பாக செய்யும் திறன் தீபக் சாஹருக்கு இருப்பதாக கூறினார். பும்ரா, முகமது ஷமி இல்லை என்றால் தமது முதல் தேர்வு தீபக் சாஹ்ர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.