தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போதயெல்லாம் மாலை நேரத்தில் சமூக வலைத்தளத்தில் கூடி இருக்கிறார். காலையில் கிரிக்கெட் களம் மாலையில் youtube என சகலகலா வல்லவன் ஆக திகழும் அஸ்வின் ரசிகரின் கேள்வி ஒருவருக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
அதாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால் அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். உலக கோப்பைக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்ற கவுண்டவுனை போட்டு எப்போது தான் அந்த தொடர் வரும் என யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அப்படி ஒரு எதிர்பார்ப்போ ரசிகன் மத்தியில் இருப்பது போல் தெரியவில்லை. இது குறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை எல்லாம் இந்தியாவில் நடைபெற்ற போது அதனை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.
ஆனால் அப்படி ஒரு எதிர்பார்ப்பு தற்போது நான் எங்கேயுமே பார்க்கவில்லை. சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அஸ்வின் தற்போது கிரிக்கெட் சீசன் பெரிய அளவில் நடைபெறாததால் இப்படி தோன்றுவதாகவும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கியவுடன் உலகக்கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு எகிறிவிடும் என்று கூறியுள்ளார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருப்பது நல்ல விஷயம் தான் என்றும் இனி மேல் பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிட்ட அஸ்வின் தம் பள்ளி மாணவனாக இருந்த போது 99,2003 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை பள்ளிக்கு எடுத்துச் சென்று இந்தியா போட்டிகள் குறித்து விவாதிப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் 1999 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்தில் பார்ப்பதற்காக பிரிட்டானியா கவரில் உள்ள ரன்களை எல்லாம் சேர்த்த நாட்களை அஸ்வின் சமூக வலைத்தளத்தில் நினைவு கூறுகிறார்.