ஏமாற்றம் கிடையாதுங்க.. நாங்கள் செய்தது சாதனை – டி20 உலககோப்பை குறித்து அஸ்வின் கருத்து

0
533

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவிய நிலையில், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சீனியர்கள் அதிரடியாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது நியூசிலாந்து தொடர்பில் சீனியர்கள் யாரும் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே இடம் பெற்று அந்தத் தொடரில் விளையாட உள்ளனர்.இந்த நிலையில் அஸ்வின் வழக்கம் போல் தனது youtube சேனல் மீது கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி செயல்பாடு குறித்து பேசிய அஸ்வின், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதை கண்டு ரசிகர்கள் நிச்சயம் மனம் வருத்தப்பட்டு இருப்பார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் தோற்றத்துக்கு எந்த காரணத்தையும் சொல்லி உங்களை மறக்க வைக்க முடியாது. நிச்சயம் இந்த தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

ஆனால் இந்த தோல்வியிலிருந்து ரசிகர்கள் நகர்ந்து செல்ல வேண்டும். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்ததாக சொல்லப்பட்டால் அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அரை இறுதிப்போட்டி வரை இந்திய அணி சென்றது நான் சாதனையாக கருதுகிறேன். ஆனால் இந்திய அணி ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது எங்கள் அணி மீது அவர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

Ashwin

- Advertisement -

இதனால் அவர்களுடைய ஏமாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்களைவிட எங்களுக்கு 200, 300 மடங்கு ஏமாற்றமாக இருந்தது. நியூசிலாந்து தொடருக்கு பயிற்சியாளர் டிராவிட் ஏன் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்று பலரும் கேட்கிறார்கள். முதலில் டி20 உலக கோப்பைக்காக பயிற்சியாளர் டிராவிட் உடலாலும் மனதளவிலும் எந்த அளவிற்கு உழைத்தார் என்று நான் அருகில் இருந்து பார்த்தேன்.

நிச்சயம் இந்தத் தொடர் டிராவிட்டுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கும். இதனால் நிச்சயம் பயிற்சியாளர்களுக்கும் ஓய்வு தேவை .நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் உடனே வங்கதேசம் போட்டி தொடங்குகிறது. இதற்கும் பயிற்சியாளர் டிராவிட் பணியாற்ற வேண்டும். இதனால் நியூசிலாந்து தொடரில் டிராவிட் ஓய்வெடுத்துக் கொண்டதில் எந்த தவறும் இல்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.