“குயின்டன் வேறு மாதிரி ஓய்வு பெற விரும்பி இருப்பார்.. ஆனால்..!” – தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா வேதனையான பேச்சு!

0
1840
Bavuma

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் 31 வருடங்களாக இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத சோகம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்றும் தொடர்ந்தது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது. அதற்கு மேல் போட்டியை 48வது ஓவர் வரையில் இழுத்துக் கொண்டு வந்தாலும், தென் ஆப்பிரிக்க அணியால் வெற்றி பெற முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு சதங்கள் உடன் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் இந்த உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவருக்கு கடைசி போட்டியாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் தோல்விக்குப்பின் பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா “வார்த்தைகளால் சொல்வது கடினம். வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு முதலில் வாழ்த்துக்கள். இறுதிப் போட்டிக்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இன்று நன்றாக விளையாடினார்கள். நாங்கள் பேட்டிங்கில் போட்டியை தொடங்கிய விதத்தில்தான் தோற்று விட்டோம்.

- Advertisement -

அவர்கள் சிறந்த பந்துவீச்சு தாக்குதலுடன் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழக்கும் பொழுது நீங்கள் போராடுவீர்கள். கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் விளையாடும் பொழுது எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தது. துரதிஷ்டவசமாக கிளாசன் அதிக நேரம் களத்தில் நிற்க முடியவில்லை.

டேவிட் மில்லரின் இன்னிங்ஸ் அபாரமாக இருந்தது. அது ஒட்டுமொத்த அணியின் குணாதிசயத்தையும் எடுத்துக்காட்டியது. இதுபோன்ற நெருக்கடியான நிலைமையில் உலகக்கோப்பை அரையிறுதியில் இப்படி விளையாடுவது அசாத்தியமானது.

அவர்கள் முதல் 10 ஓவர்களில் 70 ரன்கள் பெற்றார்கள். அது அவர்களுடைய மற்ற பேட்ஸ்மேன் எளிமையாக விளையாடுவதற்கு வழிவகுத்தது. மார்க்ரம் மற்றும் மகாராஜ் இருவரும் அற்புதமானவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் கடினமாக இருந்தது.

கோட்சி ஒரு இளைஞனாக எங்களுக்கு சிறந்த போர் வீரர். அவருக்கு காலில் தசைப்பிடிப்பு இருந்த பொழுதும் தொடர்ந்து பந்து வீச விரும்பினார். ஸ்மித் விக்கெட்டை அவர் வீழ்த்தியது அபாரமானது.

குயிண்டன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை வேறு விதத்தில் முடிக்க விரும்பி இருப்பார். இதன் காரணமாகவே அவர் இதை அதிகம் ஞாபகத்தில் வைத்திருப்பார். அவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சிறந்தவர்களில் ஒருவராக எப்பொழுதும் இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!