8 ஃபோர்ஸ் 9 சிக்ஸ்.. டி காக் புது ரெக்கார்ட்.. டி20 WC பைனல் நடந்த அதே மைதானம்.. சிபிஎல் 2024

0
682
Quinton

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பிரான்சிஸ் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸ் மற்றும் கயானா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பார்படாஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் பார்படாஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததோடு ஒரு ஸ்பெஷல் சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

கரிபியன் லீக் தொடரின் 16வது போட்டியில் ரோமன் போவல் தலைமையிலான பார்படாஸ் அணியும், சாய் ஹோப் தலைமையிலான கயானா அணியும் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கயானா அணியும் முதலில் பார்படாஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி டி காக் ஒரு முனையில் தொடக்க வீரராக அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருக்க மறுமுனையில் கதீம் 22 ரன்களில் வெளியேறினார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய அதான்சே 16 ரன்களும், கேப்டன் ரோமன் போவல் ஏழு ரன்களில் வெளியேறினர். அதற்குப் பிறகு களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஒரு ரன்னில் வெளியேற, ஹோல்டர் பத்து பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த குயிண்டன் டி காக் 68 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்கள் என 169 ஸ்ட்ரைக் ரேட்டில் 115 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

115 ரன்கள் குவித்ததன் மூலமாக பார்படாஸ் அணியில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்கள் ஆக இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ரன்கள் சிபிஎல் 6வது தனிநபர் அதிகபட்ச ரன்கள் ஆகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி நடைபெற்ற மைதானம் கடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய அதே மைதானம் ஆகும். அதிலும் டி காக் ஓரளவு நன்றாக விளையாடி 39 ரன்கள் குவித்து இருப்பார். இதனால் பார்படாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கயானா அணி களம் இறங்கியது.

கயானா அணிகள் தொடக்க விக்கட்டுகள் விரைவிலேயே வெளியேறினாலும் கேப்டன் சாய் ஹோப் 34 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 40 ரன்கள் குவித்தார். அவருடன் விளையாடிய ஹெட்மயர் 10 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். முன்னணி வீரர்கள் ஓரளவு அதிரடியாக விளையாடினாலும் இறுதியில் கயானா அணியால் 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதையும் படிங்க : 525 ரன் மேட்ச் டிரா.. ருதுராஜ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம்.. சாம்பியனாக எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்? – துலீப் டிராபி 2024

இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணி வெற்றி பெற்றது. பார்படாஸ் அணியின் டி காக் 115 ரன்கள் குவித்ததன் மூலமாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -