இத செஞ்சா போதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம்!

0
1865
shreyas iyer ashwin

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0  என்ற கணக்கில்   வெற்றி பெற்றிருப்பதன் மூலம்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின்  புலிகள் பட்டியலில்  தனது   இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை  வெற்றி பெற்றதை தொடர்ந்து  இந்திய அணி புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது . இரண்டாம் இடத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி  ஆஸ்திரேலியா உடன் ஆன முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து  மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ்  அணியுடனான  இரண்டாவது டெஸ்ட் போட்டியையும்  இந்திய அணி கைப்பற்றி  புள்ளிகளின் பட்டியலில் தனது இடத்தை  தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில்  145 ரன்கள் என்ற இலக்கை  மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது இந்திய அணி . ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும்  ஸ்ரேயாஸ்  ஐயர் ஆகியோரின்  அசத்தலான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது பங்களாதேஷ் அணியுடன் உள்ள டெஸ்ட் தொடரை அடுத்து மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் . மேலும் இது மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து மாறுபடலாம் .

தற்போது இந்திய அணியானது 58.93 என்ற வெற்றி விகிதத்துடன் புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது . இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் உள்ள டெஸ்ட் தொடரில் தோல்விகளை தவிர்த்து அந்தத் தொடரை வெற்றி பெற்றாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் . இந்தப் பட்டியலில் இந்திய அணிக்கு போட்டியாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் உள்ளன .

தென் ஆப்பிரிக்க அணி 54.55 என்ற வெற்றி விகிதத்துடன் மூன்றாம் இடத்திலும் இலங்கை அணி 53.33 என்ற வெற்று விகிதத்துடன் நான்காம் இடத்திலும் உள்ளன . தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா அணியுடன் இருக்கின்றன . இவற்றில் இரண்டு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றாலும் இந்திய அணி ஆஸ்திரேலிய க்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெறும் போது எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் .

- Advertisement -

இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன . அந்த இரண்டு போட்டிகளையும் அவர்கள் வெற்றி பெற்றாலும் இந்தியா அணியின் ஆஸ்திரேலியா தொடரின் வெற்றி தோல்விகளை பொறுத்துதான் பெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது . ஆனால் 76.32 வெற்றி விகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியானது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு கால் பதித்து விட்டது என்றே கூறலாம் .