நான் எதுவும் செய்யல.. அந்த மாஸ்டர் பிளான போட்டது ஸ்ரேயாஸ் ஐயர்தான் – பஞ்சாப் கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு

0
697
Ponting

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான முக்கியமான திட்டத்தை கொண்டு வந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்தான் என தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்து கேகேஆர் ஐபிஎல் கோப்பையை வென்றது. இருந்த போதிலும் அந்த அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் செய்ய ஏலத்திற்கு வந்து 26 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாகவும் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

திடீரென சிக்கிய பஞ்சாப் கிங்ஸ்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்தில் 97 ரன்கள் குவித்தார். அந்த அணி 243ரன்கள் குவித்தது. எனவே அந்த அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் நிலைக்கு வந்தது. கடைசி ஆறு ஓவர்களுக்கு அந்த அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் அந்த அணியின் கைகளில் எட்டு விக்கெட்டுகள் இருந்த காரணத்தினால், பஞ்சாப் கிங்ஸ் கையில் இருந்து வெற்றி நழுவ ஆரம்பித்து இருந்தது. இப்படியான நிலையில் இம்பாக்ட் பிளேயராக வைசாக் விஜயகுமார் கொண்டுவரப்பட்டார். அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும் போட்டி கடைசி ஓவருக்கு 27 ரன்கள் தேவை என்று மாறியது. இந்த நிலையில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

- Advertisement -

முக்கிய முடிவை ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்தார்

இந்த நிலையில் பவுண்டரி லைனில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் பேசி வந்தார். எனவே ரிக்கி பாண்டிங் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாக வெளியில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரிக்கி பாண்டிங் முக்கியமான ஒரு முடிவை ஸ்ரேயாஸ் ஐயர்தான் எடுத்தார் என அணிக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே vs ஆர்சிபி.. 2 டீமின் உத்தேச பிளேயிங் XI.. முக்கிய 2 மாற்றங்கள்.. ரிவென்ச் நடக்குமா?

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “நான் உட்கார்ந்து இருந்த இடத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன். குஜராத் அணியின் வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது என்ன செய்யலாம் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டேன். அவர் வைசாக் விஜயகுமாரை இம்பேக்ட் பிளேயராக அனுப்பச் சொன்னார். மேலும் அவர் யார்க்கர் வீசி ஆட்டத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறினார். அவர் சொன்னபடியே நாங்கள் செய்தோம். மேலும் வைசாக் விஜயகுமார் சிறப்பாக பந்து வீசினார். இந்த முக்கிய முடிவை ஸ்ரேயாஸ் ஐயர்தான் எடுத்தார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -