புஜாராவின் பேட்டிங் எனக்கு முன்னாள் தென் ஆப்ரிக்க வீரரை நினைவுப் படுத்துகிறது – சுனில் கவாஸ்கர் பெருமிதம்

0
71
Cheteshwar Pujara and Sunil Gavaskar

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையுடன் தென் ஆப்பிரிக்காவில் கால்பதித்துள்ள இந்திய அணிக்கு இந்த முறை அதை மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. அதே நம்பிக்கையுடன் களம் இறங்கிய இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளதால் தொடர் இப்போது சமநிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை புரிய நாம் என்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அனைத்து வீரர்களும் மிகவும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக இந்திய அணியின் சீனியர் பேட்டை வீரர்களான புஜாரா மற்றும் ரகானே மீண்டும் ஒருமுறை இந்த இன்னிங்சில் ரன் சேர்க்க முடியாமல் சொதப்பினர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கண்டிப்பாக ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இரண்டு வீரர்களுமே சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். அதிலும் மிகவும் மெதுவாக விளையாடுவார் என்று விமர்சிக்க படும் புஜாரா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இவரது அரை சதத்தில் 10 பவுண்டரிகள் அடக்கம். மேலும் இவர் ரஹானே உடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பின் காரணமாகத்தான் இந்திய அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற முடிந்தது.

- Advertisement -

புஜாரா குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புஜாரா தனக்கு ன்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லாவை ஞாபகப் படுத்துவதாக கூறியுள்ளார். அவர் ஆடும் போது மிகவும் கவனமுடன் ஆடுவதாகவும் ஆடுகளம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடி எதுவும் தன்னை மேற்கொள்ளாத விதம் விளையாடுவதும் ஹாஷிம் அம்லாவை ஞாபகப் படுத்துவதாக கூறியுள்ளார். மேலும் கவாஸ்கர் பேசுகையில் இது போன்ற உறுதியான வீரர்களுடன் டிரெஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது இளம் வீரர்களுக்கு கிடைத்தால் மிகவும் அதிஷ்டமான நிகழ்வு என்றும் கூறியுள்ளார். பரபரப்பான சூழல் நிலவும் கிரிக்கெட்டில் அமைதியான ஒரு வீரர் உடன் இருப்பது மிகவும் நல்ல விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார். மீண்டு வந்த ஃபார்மை விடாது அடுத்த டெஸ்ட் போட்டியில் புஜாரா சிறப்பாக விளையாடி தொடரை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்